டெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடு முழுவதும் கடும் கண்டனமும், எதிர்ப்பும், போராட்டங்களும் வலுத்து வரும் நிலையில் இந்த முறைகேடு குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் தேர்வு முறையில் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்யலாம் என்பது குறித்தும் அரசுக்குப் பரிந்துரைக்க 7 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை மத்திய அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ண் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையில் என்ன மாற்றம் தேவை, தேர்வை நியாயமாகவும், முறையாகவும் நடத்தத் தேவையான பரிந்துரைகள், தேசிய டெஸ்டிங் ஏஜென்சியை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த உயர் மட்டக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும். 2 மாத காலத்திற்குள் தங்களது பரிந்துரையை அளிக்குமாறு உயர் மட்டக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம்:
1. டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் தலைவர், இஸ்ரோ)
2. டாக்டர் ரந்தீப் குலேரியா (முன்னாள் இயக்குநர், டெல்லி எய்ம்ஸ்)
3. பேராசிரியர் பி.ஜே. ராவ் (ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்)
4. பேராசிரியர் கே. ராமமூர்த்தி (பேராசிரியர், சென்னை ஐஐடி)
5. பங்கஜ் பன்சால் (கர்மயோகி பாரத் வாரிய உறுப்பினர், பீப்பிள் ஸ்டிராங் அமைப்பின் இணை நிறுவனர்)
6. பேராசிரியர் ஆதித்யா மிட்டல் (ஐஐடி டெல்லி, டீன்)
7. கோவிந்த் ஜெய்ஸ்வால் (மத்திய கல்வித்துறை இணைச் செயலாளர்)
உயர் மட்டக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன், இஸ்ரோ அமைப்பின் தலைவராக செயல்பட்டவர். தற்போது கான்பூர் ஐஐடியின் கவர்னர் போர்டு தலைவராக இருக்கிறார். மேலும் ஐஐடி கவுன்சிலின் தலைவராகவும் இருக்கிறார். மத்திய அரசின் கல்வித்துறையின் பல்வேறு செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவின் சந்திரயான் 1 திட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் தினந்தோறும் புதுப் புதுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன. உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் மத்திய அரசு நீட் முறைகேடுகள் தொடர்பாக உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}