டெல்லி: 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் மோடி அரசின் முதல் பட்ஜெட் வருகிற 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். அதேபோல நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள 7வது பட்ஜெட்டும் கூட.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இது 3வது மோடி அரசாகும். இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் வருகிற 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஜூலை 22ம் தேதி நாடாளுமன்றம் கூடும். அன்றைய தினம் பொருளாதார நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து 23ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
இது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். அதேபோல நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப் போகும் 7வது பட்ஜெட் இது. 3வது மோடி அரசின் முதலாவது பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்புகள் ஏராளம் உள்ளன. பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து வருடங்களாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவி வகித்து வந்தது. இதில் முதல் ஆட்சியின்போது அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருந்தார். அடுத்த 2வது ஆட்சியில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சரானார். அப்போது அவர் 5 முறை பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார். அது 6வது பட்ஜெட்டாகும். தற்போது அவர் முழு அளவிலான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இது அவருக்கு 7வது பட்ஜெட்டாகும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யப்போகும் 13வது மத்திய பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}