நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. ராஜினாமா செய்தியில் உண்மை இல்லை.. சுரேஷ் கோபி

Jun 10, 2024,03:18 PM IST

டெல்லி: நான் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு எம்.பி பதவியே போதும்.. அமைச்சர் பதவியிலிருந்து விடுபட விரும்புவதாக நடிகரும், கேரளாவின் முதல் பாஜக எம்.பியுமான சுரேஷ் கோபி கூறியதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதை சுரேஷ் கோபி மறுத்துள்ளார்.


பிரதமர் மோடி தலைமையில் நேற்று புதிய அமைச்சரவை பதவியேற்றது. நேற்றே ஒரு குழப்பம் ஏற்பட்டது. அதாவது கூட்டணிக் கட்சியான அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இணை அமைச்சர் பொறுப்பு தருவதாக பாஜக கூறியதால் அந்தக் கட்சி அதிருப்தி அடைந்தது. கேபினட் அமைச்சர் பதவிதான் வேண்டும் என்று கூறி இணை அமைச்சர் பதவியை நிராகரித்து விட்டது. இதனால் நேற்றைய அமைச்சரவை பதவியேற்பில் தேசியவாத காங்கிரஸ் இடம் பெறவில்லை.




இந்த நிலையில் இன்று இன்னொரு குழப்பம் ஏற்பட்டது. அதாவது கேரளாவின் முதல் பாஜக எம்பி என்ற சாதனை படைத்த சுரேஷ் கோபி மூலம் ஒரு குழப்பம் வந்தது. திருச்சூர் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் சுரேஷ் கோபி. மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக ஒரு காலத்தில்  வலம் வந்தவர் சுரேஷ் கோபி. இப்போதும் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தார் பிரதமர் மோடி. சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த சுரேஷ் கோபி மகள் திருமணத்திற்கும் பிரதமர் மோடி வந்திருந்து வாழ்த்தி ஆசி வழங்கியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். நேற்று சுரேஷ் கோபியும் கூட சந்தோஷமாகத்தான் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் தான் விரைவில் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று ஒரு பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் சுரேஷ் கோபி.


இதுகுறித்து சுரேஷ் கோபி கூறுகையில், நான் நிறையப் படங்களில் நடித்து வருகிறேன். அதையெல்லாம் முடிக்க வேண்டும். எனவே விரைவில் என்னை அமைச்சரவையிலிருந்து விடுவிப்பார்கள் என்று நம்புகிறேன்.  மத்திய தலைமை முடிவெடுக்கட்டும். எம்.பியாகவே என்னால் திருச்சூர் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியும் . எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று ஏற்கனவே கூறியிருந்தேன் என்றார் சுரேஷ் கோபி.


கேபினட் பதவி கிடைக்காததால் அதிருப்தியா?


தற்போது சுரேஷ் கோபி 4 படங்களில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு படம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் குறித்த படமாகும்.  படத்தில் நடிக்காமல் பாதியில் போனால் பெரும் குழப்பம் ஏற்படும், தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் சுரேஷ் கோபி தர்மசங்கடமான நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள். 


மறுபக்கம் இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது. அதாவது கேரளாவில் முதல் முறையாக பாஜக வென்றுள்ளது. நடக்கவே நடக்காது என்று கூறப்பட்டு வந்த விஷயம் அது.. தமிழ்நாட்டில் கூட வெல்ல முடியாத நிலையில் பாஜக தத்தளித்தபோது கேரளாவில், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் அரண்களைத் தகர்த்து திருச்சூரில் வெற்றி பெற்றுள்ளார் சுரேஷ் கோபி. எனவே தனக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருந்தாராம். ஆனால் வெறும் இணை அமைச்சர் பதவியே தரப்பட்டதால் அவர்ஏமாற்றமடைந்தாராம். இதனால்தான் அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக சொன்னதாக கூறப்பட்டது.


சுரேஷ் கோபி மறுப்பு:




ஆனால் தற்போது சுரேஷ் கோபி இந்த செய்திகளை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராஜினாமா செய்யப் போவதாக சில ஊடகங்கள் செய்தி பரப்பியுள்ளன. இதில் உண்மை் இல்லை. எனது பேட்டியை சரியாக புரிந்து கொள்ளாமல் செய்தி வெளியிட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் வளமான, செழுமையான கேரளாவை உருவாக்க அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என்று கூறி எக்ஸ் தளத்தில் பதிவு போட்டுள்ளார் சுரேஷ் கோபி.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்