வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் இனி தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களை பகிர வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை புதன்கிழமை மீண்டும் மாணவர் விசா பெறும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது. அதேசமயம், புதிய மாணவர் விசா வழிகாட்டுதல்களையும் அது வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவின் படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தில், தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் குறித்த விவரங்களையும் இணைக்க வேண்டும்.
இதன் மூலம், அமெரிக்காவிற்கு எதிரான கருத்துகள் அவர்களது பக்கங்களில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய முடியும். இந்த புதிய சமூக வலைத்தள வழிகாட்டுதல்களை உருவாக்கும் வரை, கடந்த மே மாத இறுதியில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா வழங்குவதை வெளியுறவுத் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இனி, மீண்டும் விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கி, சந்திப்புகள் நடைபெறும்.
சமூக வலைத்தளங்களை மேம்படுத்தப்பட்ட முறையில் பரிசோதிப்பதன் மூலம், எங்கள் நாட்டிற்கு வர முயற்சிக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் முறையாகச் சரிபார்க்கிறோம் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்களது நாட்டுக்கு எதிரான கருத்துக்களுடன் யாரும் உள்ளே வந்து விடக் கூடாது என்பதே இந்த புதிய கட்டுப்பாட்டின் நோக்கமாக கருதப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம், வெளிநாட்டு மாணவர் விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தளப் பக்கங்கள் "யூத எதிர்ப்புச் செயல்பாடு" (antisemitic activity) குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், இது விசா மறுப்புக்கு வழிவகுக்கும் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது. அமெரிக்காவுக்குக் குடியேற அல்லது கிரீன் கார்டு பெற முயற்சிக்கும் நபர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களை அமெரிக்க அரசு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சரிபார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}