"நானும் தமிழ் பேஷுவேன்".. கலகலப்பாக்கிய விவேக் ராமசாமி!

Sep 26, 2023,06:20 PM IST
வாஷிங்டன்: அமெரிக்க  அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவித்த வேலூரைச் சேர்ந்த தமிழரிடம், "நானும் தமிழ் பேஷுவேன்.. பாலக்காடு தமிழ்" என்று கூறி அவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் விவேக் ராமசாமி.

குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் விவேக் ராமசாமி. இந்த வேட்டையில் இவர் வெல்வதற்கு டொனால்ட் டிரம்ப் என்ற பெரும் தடையை தாண்டி வர வேண்டும். ஆனால் தாண்டி வந்து விடுவார் என்று பலரும் நம்புகிறார்கள்.

விவேக் ராமசாமியின் பூர்வீகம் இந்தியாவாகும். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை கணபதி ராமசாமி, கோழிக்கோடு என்ஐடியில் படித்தவர். தாயார் மருத்துவர். இவர்கள் அமெரிக்காவில் செட்டிலான பிறகு அங்கு பிறந்தவர் விவேக் ராமசாமி.



இந்த நிலையில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரிடம் வேலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உரையாடினார். உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்தேன் என்று கூறிய அவர் நானும் தமிழ்நாடுதான் என்று கூறி வேலூர் என்றார். இதைக் கேட்ட விவேக் ராமசாமி உற்சாகமாகி "நானும் தமிழ் பேஷுவேன்.. ஆனால் பாலக்காடு தமிழ்" என்று கூறி சிரித்தார்.  அவர் தமிழில் பேசியதைக் கேட்டதும் வேலூர்க்காரர் உற்சாகமாகி விட்டார்.

விவேக் ராமசாமி ரொம்ப சீரியஸான ஆள் போல என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென வி.கே. ராமசாமி போல கேஷுவலாகவும் பேசி கலக்கி விட்டார் . அவர் பேசிய இந்தத் தமிழுக்கு நிச்சயம், அமெரிக்கா வாழ் தமிழ் சமூகத்தினர் பலர் அவருக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்