ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் முக்கிய அடையாளமான ஊட்டி, மலை ரயிலின் மீது எருமைகள் மோதியதால் மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இந்த சம்பவத்தால் அசம்பாவிதம் ஏதுமின்றி மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலில் பயணம் செய்து இயற்கையின் அழகை ரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் தினமும் ஆர்வமாக ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அதிகமாக ஊட்டியை நோக்கி அதிக அளவில் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஊட்டி மலை ரயிலில் பயணித்து தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர் சுற்றுலா பயணிகள். இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரயில் சென்று கொண்டு இருந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது குன்னூர் ரயில் நிலையத்தை தாண்டி பெர்ன்ஹில் பகுதி அருகே, ரயில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தண்டவாளத்தின் எதிரே நடந்து சென்ற எருமைகள் மீது மோதியது. இதில் ஒரு எருமை மாடு உயிரிழந்தது. மற்றொரு எருமை படுகாயம் அடைந்தது.
தண்டவாளத்தில் எருமை மாடு நிற்பதை கவனித்த ரயிலின் ஓட்டுனர் உடனடியாக பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தி உள்ளார். இதனால் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 200க்கும் மேற்பட்டோர் பயணித்த மலை ரயிலில் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதால் பெரும் அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்ட ரயில் பெட்டியை மீட்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர். ரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகளை மீட்டு பத்திரமாக பஸ் மூலமாக ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர்.
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}