கீழ்வானம் செந்நிற ஆடை அணிய.... மலர்கள் சோம்பல்முறிக்க...!

Sep 25, 2026,10:50 AM IST

- வே.மிதுன்ராஜ்



வெள்ளத்தால் உடைந்த பாறைகள் 

மண்ணோடு மண்ணானாலும்... 

ஆற்றைக் காத்ததேயன்றி பயனற்று போகவில்லை....

உடைந்தாலும் பயனுள்ளதாக இரு....


--


கீழ்வானம் செந்நிற ஆடை அணிய.... 

ஆதித்யன் உதித்தான்...

மலர்கள் சோம்பல்முறிக்க...

சிட்டுக்குருவிகளின் ரீங்காரத்தொடு மலர்ந்தது காலை... !


--


அதிகாலையிலும் அந்தியிலும் 

ரசிக்கப்பட்ட ஆதவன்... 

ஏனோ உச்சிப்பொழுதில் மட்டும் தூற்றப்படுகிறான்....

உண்மைத்தன்மை வெறுப்பதாலோ..?




--


காயாய் இருக்கும் எதுவும் விதையாக முடியாது.....

கனிகளால் மட்டுமே நல்ல விதைகள் உருவாகும்....

காயாய் இருப்பதை எண்ணி கவலை கொள்ளாமல்....

கனியாய் மாறு... 

அனுபவத்தால்...!


--


மிதிவண்டியில் நாளிதழ்கள் பயணித்த காலமும்....

அம்மாவின் அதிகாலை கோலமும்....

மண்பானையில் மணந்த சாதமும்...

கதிரவனுக்கு முன் கடமையை செய்ய துவங்கிய மக்களும்....

இப்பொழுது அந்தக்காலம் என்ற புத்தகத்தில்...


--


பால் கறக்கும் ஓசையும்...

தேநீர் கொதிக்கும் வாசனையும்... 

இன்றைய நாளின்

விழிப்பொலி ஆனது...!


(வே.மிதுன்ராஜ், ஆசிரியர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

news

தலையங்கம்: சிறுமிகளுக்கு எதிரான கொடூரம்.. அயோக்கியர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும்!

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

கீழ்வானம் செந்நிற ஆடை அணிய.... மலர்கள் சோம்பல்முறிக்க...!

news

திருமலை குமாரசுவாமி திருக்கோவில்.. குன்றின் மீதமர்ந்து.. அருள் பாலிக்கும் முருகப் பெருமான்!

news

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்".. கதை அல்ல நிஜம் (2வது பகுதி)

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Story by Pooranavalli Sekar: பொறுமை.. ஒரு நிமிடக் கதை (20)

news

Short Story: மாயமான மாண்புமிகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்