டெல்லி: இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் முடிய இருப்பதால், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி நாராயணனை நியமித்துள்ளது மத்திய அரசு. அரசுப் பள்ளியில் படித்து தனது திறமையாலும், கடும் உழைப்பாலும் இந்த உயரிய நிலையை அவர் எட்டியுள்ளது பெருமைக்குரியது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இஸ்ரோ தலைவராகும் 2வது விஞ்ஞானி வி. நாராயணன்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் இஸ்ரோ, அமெரிக்கா, ரஷ்யா போன்ற விண்வெளி ஆய்வு சக்திகளுக்கே சவால் விடும் வகையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. சந்திரயான் திட்டம் மூலமாக ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியது நமது இஸ்ரோ.
இஸ்ரோவின் தலைவராக கேரளாவை சேர்ந்த சோம்நாத் கடந்த 2022 ஆம் ஆண்டு பதவியேற்று தற்போது வரை பணிபுரிந்து வருகிறார். இவரின் பதவிக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவரை நியமித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 14ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார்.
யார் அந்த வி. நாராயணன்..?

வி.நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் எளிமையான குடும்ப பின்னணியில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து இஸ்ரோவில் இணைந்தவர். 40 வருட கால அனுபவம் அவருக்கு உள்ளது. திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சியின் இயக்குனராக பணியற்றி இருக்கிறார்.
இஸ்ரோவில் தமிழகத்தைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றி உள்ளனர். அனேகமாக அனைத்து முக்கியத் திட்டங்களிலும் தமிழர்களே முக்கியப் பங்காற்றியுள்ளது கூடுதல் பெருமையாகும். குறிப்பாக ரோகினி 2 செயற்கைக்கோள் திட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முக்கியப் பங்கு வகித்தார். சந்திரயான்-1 திட்டக் குழுவின் இயக்குனராக செயல்பட்டவர் மயில்சாமி அண்ணாதுரை. சந்திரயான் 2 திட்டக்குழு இயக்குனராக வனிதா முத்தையா மற்றும் சந்திரயான் 3 திட்டக்குழு இயக்குனராக வீர முத்துவேல், இஷா 2 விண்கலத்தின் திட்ட இயக்குனராக நா. வளர்மதி மற்றும் இஸ்ரோ தலைவராக கே.சிவன், ஆதித்யா எல் ஒன் திட்ட இயக்குனராக நிகர்ஷாஜி ஆகியோர் தங்களின் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த வி நாராயணனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ தலைவராக பதவியேற்கவுள்ள வி. நாராயணன் 2 ஆண்டு காலம் அப்பதவியில் நீடிப்பார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}