உடைந்த கண்ணாடி!

Apr 20, 2026,04:30 PM IST
- வெ.சங்கர்

அன்றைய காலைப்பொழுதும் ஆரவாரமாய் துவங்கியது லட்சுமியின் இல்லத்தில்.

அவளும் தனது இல்லத்திற்கான அன்றாடப் பணிகளில் மூழ்கிப் போய்கிடந்தால். அவளின் கணவனும் அவசர அவசரமாய் அலுவலகப் பணிக்காய் தயாராகி கையில் பையுடன் முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துவிட்டுக் கிளம்பினான். 

கல்லூரிக்குச் செல்லும் மகனுக்கும் பள்ளிக்குச் செல்லும் மகளுக்குமிடையே யார் முதலில் கண்ணாடியில் முகம் பார்த்து அழகுப்படுத்திக் கொள்வது என்கிற சண்டையில் வீடே களேபரமாக இருந்தது. சமையலறையிலிருந்து கொண்டே அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டும், அதட்டிக் கொண்டும்  மகனுக்காய் பரிந்துரைத்துக் கொண்டிருந்தாள் லட்சுமி.

ஒரு வழியாக அவளின் மகன் முந்திகொண்டுக் கண்ணாடியில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கையில் அவனிடம் கையில் மதிய உணவு கொடுத்து மகளை அழைத்தால். 

அண்ணனுக்கு மட்டும் வீட்டினில் முன்னுரிமை கொடுப்பதைக் கண்டு சற்று கோபத்தில் இருந்த மகளை ஆசுவாசப்படுத்தி விட்டு இருவரையும் வழி அனுப்ப வெளிய வந்தால் லட்சுமி .'பார்த்து போயிட்டு வாங்க 'என்று சொல்லிக் கொண்டே வீட்டினில் நுழைய எத்தனித்தாள் .





வீட்டினில் எல்லோரும் தங்களின் பிம்பங்களை பார்த்துக் கொள்ளும் கண்ணாடியில் தானும் தன்னுடைய பிம்பத்தை பார்த்துவிட்டுப் பணிக்கு சென்றிட வேண்டுமென்று இருந்தவளுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. 

சுவற்றின் பிடியிலிருந்து நழுவிய ஆணியும் தானும் ஒரு முறை தன்னுடைய பிம்பத்தை கண்டிட எத்தனித்ததோ என தெரியவில்லை அந்த முகம் பார்க்கும் கண்ணாடியும் கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்து கிடந்தது 

உடைந்து கிடந்தது முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமல்ல அவளின் அன்றாடக் கனவுகளும். 

(வெ. சங்கர் , கிருஷ்ணகிரி)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்