சென்சாரில் ஆட்சேபிக்கப்பட்ட வடக்கன் படத்தின் தலைப்பு.. ரயில் என மாற்றம்.. டிஸ்னி நிறுவனம் அறிவிப்பு!

Jun 03, 2024,05:04 PM IST
சென்னை: டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வடக்கன் என்ற படத்தின் தலைப்பு 'ரயில்' என மாற்றப்பட்டுள்ளதாக இப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  வடக்கன். இப்படத்தில் பாஸ்கர் சக்தி என்ற பிரபல எழுத்தாளர் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உட்பட சுமார் 10 படங்களில்  வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். தமிழ்நாட்டில் பணி புரியும் வடமாநில தொழிலாளர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுக நடிகர் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உட்பட பலர் நடித்துள்ளனர்.



வடக்கன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படம் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே பட குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வடக்கன் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக இப்பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 

எங்கள் டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி விரைவில்  வெளியீடுக்காக காத்திருக்கும் வடக்கன் திரைப்படத்தின் பெயர் தணிக்கை அதிகாரி தடை செய்ததால் தற்போது ரயில் என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். படத்தின் வெளியிட்ட தேதி அடுத்த அறிவிப்பில் வெளியாகும். உங்களின் அனைவரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம் என தயாரிப்பாளர் வேடியப்பன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?

news

50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

news

சுதந்திரம் காப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்