- ஸ்வர்ணலட்சுமி
விசுவாசுவருடம் 20 25 டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை கேரளாவில் மலையாள மாத விருச்சிகத்தில் பௌர்ணமிக்கு எட்டாவது நாளில் "வைக தாஷ்டமி திருவிழா "கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கேரள மக்கள் அனைவருக்கும் விசேஷமான திருவிழாவாகும். வைக்கத் தாஷ்டமி திருவிழா பிரபலமான வைக்கம் மகாதேவா கோயில் கேரளாவில் கோட்டயம் அருகே "வைக்கம்" எனும் இடத்தில் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா மற்றும் ஸ்தல புராணத்தின் சிறப்புகளை பற்றிய சிறு தகவல்களை காண்போம்...
"வைக்கம்" பெயர் காரணம் :

புராண காலத்தில் வியாக்ர பாத முனிவர் சிவபெருமானை வேண்டி கடும் தவம் இருந்தார். அவருடைய தவத்தில் மகிழ்ந்து சிவபெருமானும், பார்வதி தேவியும் காட்சி அளித்தனர்.அந்த நாள் 'கிருஷ்ணபட்ச அஷ்டமி' அதாவது,தேய்பிறை அஷ்டமி என்று கூறப்படுகிறது. வியாக்ரபாத முனிவர் சிவபெருமானை வேண்டி இங்கு தரிசனம் செய்யும் மக்கள் அனைவருடைய வேண்டுதல்களையும் நிறைவேற்ற வேண்டும் என்ற வரம் பெற்றார். சிவபெருமானின் இந்த அற்புதமான தரிசன காட்சி நடைபெற்றது கோட்டயம் மாவட்டத்தில் உள்ள 'வைக்கம் 'எனும் இடத்தில் என்றும் இந்த காரணத்தினால் இந்த இடம் 'வியாக்கிர பாதபுரம்' என்றும் 'வியாக்கிரபுரம் ' என்றும் பின்னர் காலப்போக்கில் மருவி 'வியாக்கரோம்' பின்னர் 'வைக் கோம் ' என்று அழைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. தமிழில் 'வைக்கம் 'என்று அழைக்கப்படுகிறது.
ஸ்தல புராணம்:
அரக்க குலத்தில் பிறந்த கரண் எனும் அசுரன் சிவபெருமானிடம் அதீத பக்தி கொண்டவனாகவும், முத்தி பெறவும் வேண்டி கடுந்தவம் செய்தான். அவனுடைய உண்மையான பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான் அவன் கண் முன் தோன்றி, மூன்று சிவலிங்கரங்களை அசுரனிடம் கொடுத்து, இவற்றை மூன்று வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபடுவதன் மூலம் முக்தி அடையலாம் என்று அருள் கூறி மறைந்தார். அசுரன் தனது வலது கையில் ஒரு லிங்கத்தையும், இடது கையில் ஒரு லிங்கத்தையும்,வாயில் ஒரு லிங்கத்தையும் வைத்துச் சென்றான். அசுரனின் வலது கையில் இருந்த சிவலிங்கத்தை 'வியாக்ரபாதர் 'பெற்று இந்த வைக்கம்(Vaikom) ஸ்தலத்தில் பிரதிஷ்டை செய்தார். எட்டு மணூர்(Ettumanoor) என்ற ஸ்தலத்தில் கரண் அவனுடைய இடக்கையில் இருந்த சிவலிங்கத்தை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்தான். தனது வாயில் வைத்திருந்த சிவலிங்கத்தை கிழக்கு நோக்கி 'கடுத்துருத்தி' எனும் ஸ்தலத்தில் பிரதிஷ்டை செய்தான். வாயில் அசுரன் சிவலிங்கத்தை வைத்து கடித்து துருத்தி வந்ததால் "கடிச்சு துருத்தி "என்றும் பெயர் பெற்று, பின்னர் மருவி "கடு த்துருத்தி" என்று ஆயிற்று.
இந்த மூன்று சிவலிங்கங்களுக்கு "மகாதேவர்" என்னும் திருநாமம் உள்ளது. வைக்கம் ஸ்தலத்தில் "வைக்கத்தப்பன்" என்று இந்த பகுதி மக்களால் பரவலாக அழைக்கப்படுகிறார். பிரதிஷ்டை செய்ததால் இந்த இடம் 'வியாக்கர பாதீஸ்வரர் 'என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் மற்றொரு சிறப்பு அன்னதானம் ஆகும். முருகப்பெருமான் போரில் வதம் செய்து சூரபத்மனையும், தாரகாசுரனையும் வெற்றி பெறுவதற்காக சிவப்பெருமானே இந்த ஸ்தலத்தில் அன்னதானம் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகின்றது. எனவே இங்கு அன்னதானம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
வைக்கத்தில் இந்த அஷ்டமியில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.இந்நாளில் ஈசன் பார்வதி தேவியுடன் சேர்ந்து அமர்ந்து அன்னதானத்தில் பங்கு பெறுவதாகும், பக்தர்களின் பிரார்த்தனைகளை உடனே செவிமடுப்பார் என்றும் ஐதீகம் உள்ளது.
மலையாள நாட்காட்டியின் படி விருச்சிக மாதம், அதாவது தமிழில் கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமி நாளில் காலை 8 மணி முதல் 12 மணி வரை சூரிய பகவான் வைக்கத்தப்பன் மீது நேரடியாக தனது ஒளிக் கதிர்களை பரவச் செய்து தானும் தரிசனம் செய்வதாக ஐதீகம்.
இங்கு உச்சிக்கால பூஜையில் மூன்று சிவலிங்கங்களுக்கும் வரிசையாக தரிசனம் முடிப்பவர்களின் வேண்டுதல்கள் கண்டிப்பாக நிறைவேறும் என்று வழி வழியாக இங்கு நம்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வைக்கத் தாஷ்டமியின் சிறப்புகளை பற்றி அடுத்த பதிவில் காண்போம். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
{{comments.comment}}