இளையராஜாவின் மெட்டுடன்.. குரலெடுத்து பாடி.. பாரதிராஜாவை மகிழ்வித்த வைரமுத்து!

Aug 01, 2023,10:53 AM IST
சென்னை:  தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள்.. அது இளையராஜா - வைரமுத்துவுக்கும் கூட பொருந்தும். இளையராஜாவின் டியூனில் அவரே ஒரு பாடலை இயற்றி, இயக்குநர் பாரதிராஜாவிடம் பாடிக் காட்டி அவரை வாழ்த்தியுள்ளார்.

இளையராஜா  - பாரதிராஜா - வைரமுத்து .. இந்த மூவர் கூட்டணியின் காலம் தமிழ்த் திரையுலகின் பொற்காலத்தில் என்று. எப்படி எம்எஸ்வி - கண்ணதாசன்  - பீம் சிங் போன்றோரின் கூட்டணி திரையுலகில் கொடி கட்டிப் பறந்ததோ அதேபோலத்தான் இந்த ராஜாக்களும்.



தேனி மாவட்டத்து கள்ளிக் காடுகளில் திரிந்து அலைந்து வளர்ந்த இந்தக் கலைப் புயல்கள் தமிழ் திரையுலகுக்கு  ஏற்படுத்திய தாக்கம் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. காலம் இவர்களைப் பிரித்துப் போட்டு விட்டது. இப்போது சேர்வார்கள்.. அப்போது சேர்வார்கள்.. இன்றாவது சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து இனி இவர்கள் சேரவே மாட்டார்களா என்ற ஏக்கத்திலேயே ஒரு தலைமுறை வாழ்ந்து விட்டது.

இந்த நிலையில் பாரதிராஜா உடல் நலம் குன்றி தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். அவரை வைரமுத்து நேரில் போய்ப் பார்த்து நலம் விசாரித்தார்.. கவிப் பேரரசு ஆயிற்றே.. சும்மா போய் பார்த்து விட்டு வர முடியுமா.. ஒரு பாடலையும் எழுதி அதை தானே பாடியும் விட்டு வந்துள்ளார் வைரமுத்து. அவர் பாடிய ட்யூன் எது தெரியுமா.. தென் பாண்டிச் சீமையிலேயே.. ஒரு நண்பர் இளையராஜாவின் ட்யூனில்தான் இன்னொரு நண்பர் பாரதிராஜாவை வாழ்த்தி மகிழ்ந்துள்ளார் வைரமுத்து.

இளையராஜாவின் ட்யூனில் வைரமுத்து பாடல் எழுதி தானே பாடி வாழ்த்தியது அவர்களின் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆஹா.. இதுக்குத்தானேய்யா நாங்கெல்லாம் காத்துக் கிடந்தோம்.. தண்ணீரின்றி வறண்ட பூமியில்.. சொட்டு வைத்து  விட்டுப் போனது போல இருக்கே என்று அத்தனை இசை உள்ளங்களும் மெய் மறந்து இதைக் கொண்டாடிக் கொண்டுள்ளன.

இப்படியாவது இவர்கள் சேர்ந்தார்களே என்ற சந்தோஷம்தான் அதில் மிகுதி.. நீங்களும் கேளுங்கள்.. நம்ம ராஜாக்களின்அன��புப் பரிமாறலை..! 



சமீபத்திய செய்திகள்

news

மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

news

கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

news

'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!

news

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்