சென்னை: எங்கள் உறக்கத்தை கெடுத்து விட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்.. என மறைந்த நடிகர் மனோஜ்க்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
நடிகரும், இயக்குனருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இறப்பு செய்தி கேட்டு திரை உலகினர் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் முதல்வர் மு. க ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், மநீம தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தியில்,

மகனே மனோஜ் மறைந்து விட்டாயா..?
பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதி பருவத்தில் பறந்து விட்டாயா..?
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா என்று உனக்கு அறிமுக பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப் பிள்ளை நீ போய் விட்டாயே?
உன் தந்தையை எப்படித் தேற்றவேன்
"எனக்கு கடன் செய்ய கடமைப்பட்டவனே! உனக்கு நான் கடன் செய்வது காலத்தின் கொடுமைடா" என்று தகப்பனை தவிக்க விட்டு தங்கமே இறந்து விட்டாயே?
உன் கலைக் கனவுகள் கலந்து கலைந்து விட்டனவா..?
முதுமை- மரணம் இரண்டும் காலத்தின் கட்டாயம் தான். ஆனால் முதுமை வயது பார்த்து வருகிறது; மரணம் வயது பார்த்து வருவதில்லை
சாவுக்குக் கணக்கில்லை
எங்கள் உறக்கத்தை கொடுத்து விட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
{{comments.comment}}