சென்னை: கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரை சந்திக்க சென்ற கவிஞர் வைரமுத்து அவர்களுக்குள் நடந்த உரையாடல்களை கவிதை நடையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான வேட்டையன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களே பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாததால் சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது நலமாக இருக்கிறார்.
இதனை தொடர்ந்து சிறிது காலம் ஓய்வெடுத்து வருகிறார். கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், ஓய்வெடுத்து வரும் ரஜினிகாந்தை நேரில் சந்திப்பதற்காக வீட்டிற்கு சென்ற வைரமுத்து ரஜினியுடன் நடந்த உரையாடல்களை கவிதை நடையில் தொகுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை:

கடிகாரம் பாராத
உரையாடல்
சிலபேரோடுதான் வாய்க்கும்
அவருள் ஒருவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
80நிமிடங்கள்
உரையாடியிருக்கிறோம்
ஒரே ஒரு
‘கிரீன் டீ’யைத் தவிர
எந்த இடைஞ்சலும் இல்லை;
இடைவெளியும் இல்லை
சினிமாவின் அரசியல்
அரசியலின் சினிமா
வாழ்வியல் - சமூகவியல்
கூட்டணிக் கணக்குகள்
தலைவர்கள்
தனிநபர்கள் என்று
எல்லாத் தலைப்புகளும்
எங்கள் உரையாடலில்
ஊடாடி ஓய்ந்தன
எதுகுறித்தும்
அவருக்கொரு தெளிவிருக்கிறது
தன்முடிவின் மீது
உரசிப் பார்த்து
உண்மை காணும்
குணம் இருக்கிறது
நான்
அவருக்குச் சொன்ன
பதில்களைவிட
அவர் கேட்ட கேள்விகள்
மதிப்புமிக்கவை
தவத்திற்கு ஒருவர்;
தர்க்கத்திற்கு இருவர்
நாங்கள்
தர்க்கத்தையே
தவமாக்கிக் கொண்டோம்
ஒரு காதலியைப்
பிரிவதுபோல்
விடைகொண்டு வந்தேன்
இரு தரப்புக்கும்
அறிவும் சுவையும் தருவதே
ஆரோக்கியமான சந்திப்பு
அது இது என பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொங்கல் பரிசு தொகுப்பு.. ஜனவரி 8ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கண்ணில் வழிந்து.. இதயம் நனைந்து.. கடலோரத்தில் ஒரு கவிதை.. Her dance My pride!
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சின்னச் சின்ன வெற்றிகள்.. பெரிய பெரிய சந்தோஷங்கள்.. Live your only life!
அமுத ஹரி ஆராமுத ஹரி இராமஹரி ஈகைஹரி .. உலகளந்தஹரி!
தென்றலே மெல்ல வீசு
பழைய ஓய்வூதிய திட்டம்: நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியீடு.. ஜாக்டோ ஜியோ தகவல்!
மனசு மயங்கும்.. இதயம் நடத்தும்.. Inner Spark!
தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!
{{comments.comment}}