சென்னை: இத்துனூண்டு முத்தத்தில் இஷ்டம் இருக்கா.. இல்ல இங்கிலீஷ் முத்தத்தில் கஷ்டம் இருக்கா.. என காதலர்கள் போட்டி போட்டுக் கொண்டு முத்தமிட்டு காதல் வெளிப்படுத்துவதற்கான உணர்வுப்பூர்வமான தினம் இன்று.. காதல் ஏற்கப்பட்டு இனி நாம் இணைவோம் என்று முடிவுக்கு வந்த பிறகு கொடுக்கப்படும் சந்தோஷ உணர்வுப் பரிமாறல் இது.
காதலர் தின ஒரு வார கொண்டாட்டத்தில் ரோஸ் டே வில் தொடங்கி, இறுதியாக கிஸ் டே காதலர் தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது. அதாவது முத்த தினம் என சொல்லக்கூடிய கிஸ் டே ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்கள் அன்பை முத்தங்களின் மூலம் பரிமாறிக் கொள்ளும் ஒரு அழகான தினம் இன்று..!

காதல் மலர்ந்த இருவருக்குள்ளும், காதல் உறவை மேலும் பலப்படுத்துவதற்காகவே ப்ராமிஸ் டே, ஹக் டேவை தாண்டி ஒரு படி மேலாக இந்த கிஸ் டே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த தினத்தில் காதலர்கள் இருவரும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அன்பை ஒரு முத்தத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். நீண்ட நாட்களாக காதலித்தவர்களோ.. ஏற்கனவே துணை இருப்பவர்களோ.. தற்போது கரம் பிடித்தவர்கள் கூட இந்த முத்த தினத்தில் முத்தங்களை நேரடியாக பகிரும் போது உடல் அளவிலான உணர்வுகள் பரிமாறிக் கொள்வார்கள்.இதன் மூலம் காதலர்களிடையே நம்பிக்கை, மகிழ்ச்சி, கொண்டாட்டம் போன்றவற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.. வாய் வழி முத்தம் மூலமாக!
முத்தம் கொடுப்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வு ரீதியாகவும் உறுதி செய்கின்றனர். அதாவது முத்தமிடும்போது, கார்டிசோலின் அளவு குறைந்து ஆக்ஸிடாசின், டோபமைன் மற்றும் செரோடோனின் ஆகியவை சுரப்பு அதிகரிக்கிறது. இதனால் மனதில் தன்னம்பிக்கை ஏற்பட்டு உடலில் மகிழ்ச்சி உணர்வுகளை அளிக்கும் ஹார்மோன்களை தூண்டச் செய்து நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். இதனால் மகிழ்ச்சிகரமான உணர்வுகள் நமது உடலில் மன அழுத்தத்தை குறைத்து டென்ஷனை கட்டுப்படுத்த உதவுகிறதாம்.
இதுமட்டுமல்லாமல் ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடையும் குறைகிறதாம். இதனால் காதலர்களிடையே, முத்தமிடல் நமது உடல் உணர்வுகளை வெளிப்படுத்தி நம்மை உற்சாகமடைய செய்கிறது. காதலர்கள் மட்டுமல்லாமல் கணவன் மனைவி, அக்கா தங்கை, சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரும் அன்பின் அடையாளமாக வெளிப்படுத்த கன்னத்தில் தரும் முத்தமாக இருக்கட்டும், மரியாதை நிமித்தமாக கைகளில் கொடுக்கும் முத்தமாக இருக்கட்டும், பாலின உணர்வுகளை தூண்டும் பிரெஞ்ச் கிஸ் என சொல்லக்கூடிய உதட்டு முத்தமாக இருக்கட்டும்.. இப்படி விதம் விதமாக முத்தங்களை கொடுத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணர்வுபூர்வமாக அன்பை பரிமாறிக் கொள்ளும் அழகான இந்த தினத்தில் அன்பானவர்களுக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யுங்கள்..
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
வந்தே மாதரம்.. 150வது ஆண்டைக் கொண்டாடும் இந்தியாவின் தேசியப் பாடல்!
மீண்டும் சரிவை நோக்கி சரிந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 சரிந்தது!
அறிவுப்பூர்வமான செய்தியாளர்கள் அருகிப் போனது ஏன்?
கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
{{comments.comment}}