Propose Day 2025.. உன் ரசனையும்.. என் ரசனையும் சந்தித்தால்.. காதல் தித்தித்தால்.. ஏற்றுக்கொள் அன்பே!

Feb 08, 2025,10:28 AM IST

சென்னை: பெண்கள் எப்போதுமே அதிக ரசனை உடையவர்கள். அதிலும் தனக்குப் பிடித்தவர், தன்னிடம் காதைலயும், அன்பையும் வெளிப்படுத்தி, ப்ரொபோஸ் செய்யும் தருணம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என காதலி எண்ணுவது இயல்பு தான்.. இதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு, இன்னிக்கு உங்களுக்குப் பிடிச்சவருக்கு  ரசனையோடு ப்ரபோஸ் செய்யும் அழகான தருணம் இன்று.... ஏன்னா இன்னிக்கு காதல் வாரத்தில், புரபோஸ் டே!

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காகவே உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம். அந்த வரிசையில் இந்த வருடம் காதலர் தின கொண்டாட்டத்தில் நேற்று முதல் நாள் ரோஸ் டேவில் தொடங்கி இரண்டாம் நாளான இன்று ப்ரபோஸ் டே கடைபிடிக்கப்படுகிறது. இந்த ப்ரபோஸ் டே ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தனது லைஃப் பார்ட்னராக தேர்வு செய்யப்பட்ட காதலியிடம் அல்லது காதலரிடம், காதலர்கள் தனது காதலை வெளிப்படுத்துவார்கள். தனது வாழ்வில் காதலியை தேடுபவர்கள் மட்டுமல்லாமல் ஏற்கனவே துணையைத் தேடியவர்களும் இந்த காதலர் தின கொண்டாட்டத்தில் வரும் ப்ரபோஸ் டேவை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.



தன் காதலியை தேர்ந்தெடுத்த காதலனோ அல்லது காதலனைத் தேர்வு செய்த காதலியோ எப்படி உணர்ந்து இருப்பார்கள் தெரியுமா..? நம் மனதில் ஏதோ  பட்டாம்பூச்சி பறப்பது போன்று, இனம் புரியாத உணர்வுகளுடன் கூடிய சந்தோஷங்களும் நம் வாழ்க்கைத் துணைக்கு இவள்தான் பொருத்தமானவள் என்று கடவுளே வந்து சொல்வது போன்ற பெல்  சத்தமும் கேட்குமாம். அப்படி கேட்டு காதலை உறுதிப்படுத்தும் தருணமான இன்று அன்பு கனிந்த காதல் உணர்வுகளை வெளிப்படுத்த தயங்காமல் தாமதிக்காமல் உடனடியாக உங்கள் துணையிடம் சென்று இந்த உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருந்தாலும் எனது வாழ்க்கை துணையாக உன்னை  தேர்வு செய்து உன் கரம் பிடிக்கிறேன் என்று டயலாக் எல்லாம் சொல்லி அவர்களை சந்தோஷ மழையில் நனைய வைத்து  ப்ரபோஸ் செய்யுங்கள். 

காதலர்கள் தன்னிலை மறந்து காதலை வெளிப்படுத்தும் அந்த தருணத்தில் வார்த்தைகளை மௌனம் ஆக்கி, மனங்களில் எழும் எண்ணங்களை கண்களில் ஜாடை காட்டி காதலியின் இரு கரங்களைப் பிடித்து காதல் உணர்வுகளை ஊட்டி பரவசத்தில் திளைக்க வையுங்கள். அப்படி ப்ரபோஸ் செய்ய போகும்போது வெறும் கையுடன் போகாமல்  அவர்களுக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து ப்ரபோஸ் செய்யுங்கள். காதலை சொல்லும் போது பயத்தை போக்கி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காதலிக்குப் பிடித்தமான காதல் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.. கண்டிப்பா சக்சஸ் தான்.  

எல்லாம் சக்ஸஸ் தான்.. ஆனால் இனிமேல் கிஸ் கிஸ் வா வா.. என்ற பாடல் வரிகளே உள்ளது. இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப ப்ரபோஸ் செய்து சக்சஸ் ஆகிவிட்டால் அடுத்து  கிஸ் டே தான்... அதுக்கு நாள் இருக்கு, முதல்ல புரபோசலை வெற்றிகரமாக முடிங்க.

அப்புறம் என்ன ஒவ்வொரு நிமிஷமும் தாமதிக்காமல் உங்கள் மனதில் ஏற்படும் உணர்வுகளை உங்க பிடிச்சவங்க கிட்ட போய் தைரியமா ப்ரொபோஸ் பண்ணுங்க. வாழ்க காதல்.. வளர்க காதல்..!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கருப்புக் கொடி காட்டிய.. பாஜக இளைஞர் அணியினரை அருகே அழைத்து.. மிட்டாய் கொடுத்த ராகுல் காந்தி

news

காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை: மரங்கள் மாநாட்டில் தவெகவை தாக்கி பேசிய சீமான்

news

சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?

news

அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!

news

என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!

news

இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

news

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!

அதிகம் பார்க்கும் செய்திகள்