பிரச்சாரத்துக்குப் போன இடத்தில்.. வீடு புகுந்து.. ரொட்டி சுட்ட வானதி சீனிவாசன்!

May 02, 2023,10:33 AM IST
பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் போன இடத்தில் ஒரு பாஜக பிரமுகரின் வீட்டுக்குள் சென்று அங்கு சோள ரொட்டி சுட்டு அசத்தினார் கோவை தெற்குத்  தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் வானதி சீனிவாசன், பாஜக மகளிர் அணித் தலைவராகவும் இருக்கிறார். இதனால் நாடு முழுவதும் பெரும்பாலும் சுற்றுப் பயணத்திலேயேதான் இருப்பார். தற்போது கர்நாடக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.



இதற்காக பெங்களூரு சென்றிருந்த அவர் அங்கிருந்து கார் மூலம் காலபர்கி என்ற நகருக்குச் சென்றார். அங்கு மகளிர் அணிப் பிரமுகர்களுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பாஜக பெண் பிரமுகர் வீட்டுக்குள் சென்ற அவர் அங்கிருந்தவர்களுடன் பேசினார். பின்னர் அந்த ஊரில் மிகப் பிரபலமான ஜாவார் ரொட்டி அதாவது சோள ரொட்டி பற்றிக் கேள்விப்பட்ட அவர் தானே அதைச் செய்வதாக விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து கிச்சனுக்குள் மகளிர் பட்டாளம் புகுந்தது. எப்படி அந்த ரொட்டியைச் சுட வேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொண்ட வானதி, களத்தில் குதித்தார். ஜாவார் ரொட்டியை கைகளால் தட்டித் தட்டி பின்னர் அதை தோசைச் சட்டியில் போட்டு சுட வேண்டும். நம்ம ஊர் சோள ரொட்டிதான் இது. ஆனால் இந்த  ரொட்டி கர்நாடகத்தில் மிகவும் பிரபலமானது. சும்மா சொல்லக் கூடாது, கன்னடத்துக்காரர்கள் சுடுவது போலவே சூப்பராக சோள ரொட்டியைச் சுட்டுத் தள்ளினார் வானதி சீனிவாசன்.

இதுகுறித்த ஒரு சுவாரஸ்யமான வீடியோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார் வானதி சீனிவாசன்.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

வெந்தயக் களி

news

கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!

news

உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

news

4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்