விட்டாச்சு லீவு.. சிங்கம் புலி பார்க்கப் போறீங்களா.. வண்டலூர் ஜூ இன்று திறந்திருக்கும்!

May 02, 2023,09:30 AM IST
சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஆண்டுத் தேர்வுகள் எல்லாம் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதையடுத்து  மக்கள் குடும்பம் குடும்பமாக அம்மா வீடு, தாத்தா பாட்டி வீடு, உற்றார் உறவினர் வீடுகள், கோடை வாசஸ்தலங்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத்  தலங்களுக்கும் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.



இதனால் கோடை வாசஸ்தலங்கள், சுற்றுலாத்தலங்களில் அரசு சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  சென்னை அருகே உள்ள வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை தோறும் மூடப்படும். ஆனால் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமைகளில் பூங்காவை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விலங்குகளை வேடிக்கை பார்க்க வரும் மக்கள் இன்று வண்டலூர் சென்று மகிழலாம். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் ஹோட்டல் தமிழ்நாடு ரெஸ்டாரென்ட் புத்தம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கேயும் சென்று உணவுகளை ஒரு கை பாருங்கள்.

காலை 9 மணிக்கெல்லாம் பூங்கா திறந்து விடும். மாலை 5 மணி வரை பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழலாம்.மே��ும் விவரங்கள் தேவைப்பட்டால்.. கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம்.

044-29542301, 044-22750741.
இமெயில்  - support@aazp.in

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்