பாக்யராஜின் மகனாக.. "குட்டி ரஜினி"யாக நடித்த.. இயக்குநர் சூரிய கிரண் காலமானார்!

Mar 11, 2024,06:13 PM IST

சென்னை:  படிக்காதவன் படத்தில் சிறு வயது ரஜினிகாந்த்தாகவும், மெளன கீதங்கள் படத்தில் பாக்யராஜ் - சரிதா ஜோடிக்கு மகனாக நடித்தவருமான மாஸ்டர் சுரேஷ் எனப்படும் சூரியகிரண் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 


வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள அரசி படத்தை இவர் இயக்கி வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.


மௌன கீதங்கள்,  படிக்காதவன் உள்பட பல படங்களில் நடித்தவர் சூரிய கிரண். இவருக்கு வயது 49. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜிதாவின் அண்ணன் ஆவார். சமுத்திரம் படத்தில் சரத்குமாருக்கு தங்கையாக நடித்த நடிகை காவேரியின் முன்னாள் கணவர். நடிகை காவேரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.  




சூர்ய கிரணின் உண்மையான பெயர் சுப்பிரமணி ராதா சுரேஷ். இவர் சினிமாவிற்காக சூர்ய கிரண் என பெயரை மாற்றிக்கொண்டவர் .சூரிய கிரண்  தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற  படங்களை இயக்கியவர். இதற்கு பிறகு இவர் இயக்கிய படங்கள் தோல்வியை தழுவியன. இவர் தெலுங்கு பிக் பாஸ்சில் கலந்து கொண்டார்.


தற்பொழுது, தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சூரிய கிரண் இன்று காலமானார். குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விரும் (நந்தி அவார்டு) பெற்றுள்ளார். இவரின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது. இவரது மறைவிற்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்