சென்னை: இயக்குனர் அனில் கட்ஸ் இயக்கத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த சபரி திரைப்படம் வரும் 2024, மே 3 ஆம் தேதியன்று பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக தயாராக உள்ளதாம்.
மகா மூவிஸ் தயாரிப்பில், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் சபரி திரைப்படத்தை அனில் கட்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகியுள்ளார்.இவர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஆகியவற்றையும் கையாண்டுள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இப்படம் சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடித்து, அதிரடி ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளாராம். மேலும் கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, விவா ராகவா, பிரபு, பத்திரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி, போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அஷ்ரிதா வேமுகந்தி, ஷர்ஷினி கொடுகு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி, நிவேஷா, பேபி கிருத்திகா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வரலட்சுமி நடிப்பில் திர்லராக உருவாகியுள்ள சபரி திரைப்படம் வரும் மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவர தயாராக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாம்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}