சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மீண்டும் ஒரு புதிய வரலாறு இன்று எழுதப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இன்று தங்களை முதல் முறையாக இணைத்துத் கொண்டுள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ஏ.எம். ஷாஜகான் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற எளிமையான விழாவில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் இருவருக்கும் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு முதலில் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்தன விசிகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் தவெக இடம் கொடுத்தது. இருவர் காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களானார்கள்.

அதேபோல மற்ற கட்சிகளுக்கும் விஜய் நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சர் பதவி தங்களுக்குத் தேவையில்லை என்று கூறி விட்டன. விசிக மற்றும் முஸ்லீம் லீக் இருவரும் முதல்வர் விஜய்யின் அழைப்பை ஏற்று இன்று அமைச்சரவையில் இணைந்தன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாகவே ஆட்சியில் பங்கு கோரி வந்தது. ஆனால் திமுக, அதிமுக ஆட்சிகளில் இது கனவாகவேப் போனது. தற்போது முதல் முறையாக அமைச்சரவையில் இணைந்து இத்தனை கால போராட்டக் கனவை நனவாக்கிக் கொண்டுள்ளது திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
இதேபோல தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணி வைத்து அவர்கள் ஆட்சிக் கட்டில் ஏற உதவிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் முதல் முறையாக அமைச்சரவையில் இடம் பிடித்து வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டுள்ளது.
நேற்றுதான், கிட்டத்தட்ட 59 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம் பெற்று காங்கிரஸும் புதிய வரலாறு என்பது நினைவிருக்கலாம். இவர்களின் இத்தனை கால கனவுகளையும் அடுத்தடுத்து நிறைவேற்றி தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர் விஜய்யின் பெயர் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?
தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!
மன்னித்து அருளக் கூடியவர் அன்னூர் மன்னீஸ்வரர்!
அரட்டை அரங்கம் விசு.. மறக்க முடியாத மீனாட்சிசுந்தரம் ராமஸ்வாமி விஸ்வநாதன்!
{{comments.comment}}