கடலூர்: சட்டசபைத் தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என்று நிபந்தனை ஏதும் வைக்கமாட்டோம் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காட்டுமன்னார்கோவிலில் இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து வழங்க வேண்டும். வீராணம் ஏரியை பகுதி பகுதியாக தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை அரசு நிறைவேற்றி தர வேண்டும்.

தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என்று நிபந்தனை ஏதும் வைக்க மாட்டோம். எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என நாங்கள் முன்கூட்டியே நிபந்தனை வைத்ததில்லை.எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிற போது தான் முடிவு செய்வோம். நாங்கள் 2011ல் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டோம். எண்ணிக்கையை பெருக்க வேண்டும். கூடுதலான இடங்களில் போட்டி இட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்று தான்.
கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதை அனுசரித்து முடிவை நாங்கள் மேற்கொள்வோம். மாநில கட்சிகளின் மீது, மாநில அரசின் மீது அவருக்கு ஒரு ஒவ்வாமை இருக்கிறது. வருகிற ஜனவரி 6ம் தேதி சட்டபேரவை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. மறுபடியும் அவர் சட்டப்பேரவையில் வரம்புகளை மீறி நடப்பாரோ என்ன அச்சம் நிலவுகிறது. துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரங்களில் மாநில அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிற நிலையை உருவாக்கியுள்ளார். அவருடைய விருப்பம் போல் முடிவுகளை எடுக்கிறார். இந்த போக்கை விடுதலை சிறுத்தை கட்சி கண்டிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}