விழுப்புரம்: விஜய்க்கு ஆர்கானிக் மாஸ் என்கின்றனர். அப்படி என்றால் விசிக என்ன இன்ஆர்கானிக் மாசா. நாங்கள் காசு பிரியாணி என எதையும் கொடுக்கவில்லை. குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளோடு விசிகவுக்கு வந்தனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எப்போதும் தேர்தல் வந்தால் தான் அரசியல் களம் சூடுபிடிக்கும், ஆனால், தற்போது தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி நடத்திய மாநாட்டில் இருந்து அரசியல் களம் ப[டு சூடாக காணப்படுகிறது. மாநாடு முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை விஜய் பேசிய கருத்து குறித்த விவாதம் முடிந்தபாடில்லை. தொடர்ந்து பல்வேறு கட்சியினர்களும் விஜய் பேசியது குறித்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:
விஜய்க்கு கூடியது ஆர்கானிக் மாஸ் என்கின்றனர். அப்படி என்றால் விசிக என்ன இன்ஆர்கானிக் மாசா. நாங்கள் காசு பிரியாணி என எதையும் கொடுக்கவில்லை. குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளோடு விசிகவுக்கு வந்தனர். திருமாவளவன் தலைமையில் ஆட்சி, கூட்டணி என்று யாராவது பேசினார்களா.இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்து இருக்கிறார்கள். இது தான் இந்த சமூகம். விசிகாவிற்கு ஆசை காட்டினால் வெளியில் வந்து விடுவார்கள் என்று நினைக்கின்றனர். திருமாவளவன் சராசரியான அரசியல்வாதி இல்லை என்பது காலம் சொல்லும்.
அதை புரிந்து கொள்ளவே உங்களுக்கு இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்படும். யார் வந்தாலும், புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் விடுதலை சிறுத்தை கட்சிக்கு போட்டியாளர்களாக இருக்க முடியாது. எங்களுடைய களம் முற்றிலும் வேறானது. இந்த களத்தில் யாரும் நம்முடைய போட்டிக்கு வர முடியாது. இந்த இயக்கத்தை நம்மால் மட்டும்தான் செயல்படுத்த முடியும். எனவே நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் முன் கவனமாக இருக்க வேண்டும்.
விஜயகாந்த் வந்த போது கூறினார்கள் விசிக காணாமல் போய்விடும் என்று. இன்று விஜய் வந்தவுடன் பயங்கரமான ஹைப் கொடுக்கின்றனர். ஒவ்வொரு தொலைக்காட்சியும் திரும்பத் திரும்ப போட்டு காட்டுகின்றனர். ஆனால், நமக்கு அப்படி செய்யவில்லை. நான் சினிமா நட்சத்திரம் கூட இல்லை. எப்படி இவ்வளவு லட்சம் பேரை இழுத்தார்கள் என்று விவாதித்தார்களா?. 7:00 மணிக்கு மேல் கூட்டம் தாங்காது என்று ஏளனமாக பேசினார்கள். ஆனால், விடுதலை சிறுத்தைகள் அப்படி இல்லை என்று இப்போது தெரிந்திருக்கும் என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}