ஒரே பானையில்.. 2 தொகுதிகளை லட்டு போல அள்ளிப் போட்டு.. ஜம்மென்று வென்ற விடுதலைச் சிறுத்தைகள்!

Jun 05, 2024,12:54 PM IST

சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து  இந்த முறையும் தமிழ்நாட்டில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பான வெற்றி பெற்றுள்ளனர்.


லோக்சபா தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில்

திமுக தலைமையில் திமுக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ்  9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும், மதிமுக ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.




வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி கிடைத்தது. 


கடந்த 2019 ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது கட்சியின் ரவிக்குமார்  உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


இந்த  முறை திமுக கூட்டணியில் இடம் பெற்ற விசிக, பானை சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் தீர்மானமாக இருந்தது. இதற்காக சட்ட ரீதியாகவும் போராடியது. இருப்பினும் சுயேச்சை சின்ன வரிசையில், திருமாவளவனுக்கும், ரவிக்குமாருக்கும் பானை சின்னம் ஒதுக்கப்பட்டதால் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


சிதம்பரம் தனி தொகுதியில் வீசிக தலைவர் திருமாவளவன் 1,03,554 வாக்குகள் வித்தியாசத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 70,703 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளதால் தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்பி ஆகின்றனர்.


இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் அவர்களும் மகாராஷ்டிராவில் இருக்கும் சிவசேனா அமைப்பும் இந்தியா கூட்டணியிலான காங்கிரஸ் அமைப்பில் கை கோர்க்க வேண்டும். நவீன் பட்நாயக் அவர்களும் இந்த அணியுடன் இணைய வேண்டும். அப்போதுதான் இந்த 10 ஆண்டு காலமாக இருந்த ஆட்சியை மோடியின் தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை உறுதியாக தூக்கி எறிய முடியும். அவருடைய அரசியலுக்கு சமாதி கட்ட முடியும் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!

news

அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?

news

கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி

news

தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?

news

என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!

news

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?

news

முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

news

பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்