மதுரை: வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பின் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வருவது குறைந்திருப்பதால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி காய்கறி சந்தை மிகவும் பிரபலமானது. இங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு தென் மாவட்டங்களில் இருந்தும், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் இங்கு சில்லறை வியாபாரிகள் பெருமளவில் வந்து மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டி வருவது வழக்கம்.

ஆனால் கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில்தான் வெப்பநிலை அதிகபட்சமாக 105 டிகிரி வரை சுட்டெரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது காய்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்து இருக்கிறது.
புரட்டாசி மாதம் எதிரொலி:
இது மட்டுமல்லாமல் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஏராளமான மக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து சைவம் மட்டுமே உண்டு வருகின்றனர். குறிப்பாக மதுரை பகுதிகளில் வசித்து வரும் சௌராஷ்டிரா சமூக மக்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வேண்டி அன்னதானமும் வழங்கி வருவர். இதனால் இந்த நாட்களில் பெரும்பாலும் சைவ உணவுகளையே உண்டு வருகின்றனர். இதன் காரணமாக தற்போது காய்கறிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறியின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூபாய் 350 லிருந்து 600 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ ரூபாய் 60 க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது ரூபாய் 90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ கேரட்டின் விலை 50 லிருந்து 70 ஆகவும், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 40லிருந்து 60 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக இல்லத்தரசிகள், எந்தக் காயை வாங்கி எப்படி சமைப்பது என்று கவலை அடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!
அரங்கன் யாவுமே அறிந்தவனே!
அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து
தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
{{comments.comment}}