சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் இன்று காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த ஒரு மாத காலமாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருந்து வந்தது. இதனால் வீடுகளில் தினசரி உபயோகிக்கும் காய்களின் விலை கணிசமாக அதிகரித்து இருந்தது. குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஒரு வாரம் ஆக காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. ஏனெனில் தினசரி கோயம்பேடு சந்தையில் 700 லாரிகளில் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படும்.

கடந்த ஒரு வாரமாக 300 லாரிகளில்தான் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக பெரும்பாலான பகுதிகளில் காய்கறி விலை அதிகமாக விற்கப்பட்டு வந்தது. இதனால் தினசரி அத்தியாவசிய தேவைக்காக மக்கள் அதிகம் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று கோயம்பேடு சந்தையில் 500க்கும் அதிகமான லாரிகளில் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூபாய் 120 இருந்த அவரக்காய் மற்றும் பீன்ஸ் விலை இன்று ஒரு கிலோ 90 ரூபாயாக குறைந்துள்ளது. அதேபோல் தக்காளி, வெங்காயம், பீட்ரூட் , முள்ளங்கி, சௌசௌ, முட்டைக்கோஸ், போன்றவை கிலோ 50க்கும் குறைவாக விற்கப்பட்டு வருகிறது. விலை குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}