கொடைக்கானலுக்கு செல்லும்.. வாகனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்.. இன்று நள்ளிரவு முதல் அமல்..!

Mar 31, 2025,06:02 PM IST

கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் வாகனங்களுக்கு கட்டுப்பாடு அளித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல்  அமல்படுத்தப்பட உள்ளது.


 கோடை விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அதிக அளவு கொடைக்கானலுக்கு வருகை தருவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி முதல் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல இ-பாஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. குறிப்பாக வெளியூரிலிருந்து ஊட்டி,கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் கணிசமாக குறைந்தது. சுற்றுலா பயணிகள் விண்ணப்பித்த இ-பாஸ் அனைவருக்கும் வழங்கப்பட்டாலும் கூட, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. ‌ இதனால் சீசனை நம்பி பிழைப்பு நடத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்  கேள்விக்குறியானது. 




இதனால் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என அங்குள்ள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 


அதன்படி, ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு மட்டுமே முதலில் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.

கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4000 வாகனங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அரசுப்  பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. அதேபோல் உள்ளூர் தொழிலாளர்கள்  பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.


நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை 6000 வாகனங்கள் , சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் ஜூன் மாத இறுதி வரை சுற்றுலா வாகனங்கள் விதிக்கப்படும். நீலகிரி பதிவெண் கொண்ட சரக்கு வாகனங்கள், ஆம்புலன்ஸ், அவசரகால வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.


இன்று நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், நீலகிரியில் 12 இடங்களில் இ-பாஸ் சோதனை  மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



சுற்றுலாப் பயணிகள் epass.tnega.org" என்ற இணையதள வாயிலாக பதிவு செய்து இ_பாஸ் பெற்று பயணம் செய்யலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

அதிகம் பார்க்கும் செய்திகள்