வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருவிழா: நாகை, கீழ்வேளூர் வட்டங்களுக்கு நாளை.. உள்ளூர் விடுமுறை!

Aug 28, 2024,04:13 PM IST

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நாளை ஆக., 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி  நிறைவடைகிறது. விழாவின் முக்கிய நகழ்வான தேர்பவனி செப். 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவிற்கு உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட   ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.




விழாவிற்கு வருபவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 2000த்திற்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தெற்கு மற்றும் மேற்கு ரயில்வே துறை சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருகின்றன. திருவிழாவை முன்னிட்டு 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


இந்நிலையில்,  ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 29ம் தேதி நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவில், வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக., 29இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்.29 வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்