சென்னை: அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலக் காரணமாக சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு நவம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
நாகை மாவட்டத்தில் 125 ஜே.சி.பி. இயந்திரங்கள், 75 மோட்டார் பொருத்திய படகுகள் உள்பட அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.கனமழையின் போது பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும். மழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் இருக்க வேண்டும். மின் விநியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ள நீர் தேங்கும் பட்சத்தில் பயிர்கள் சேதம் அடைவதை தடுக்க நடவடிக்கை அவசியம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோயில்! (பழமொழியும் உண்மை பொருளும்)
சிரிங்க சிரிங்க.. நல்லா சிரிங்க.. Laughter is the best medicine!
அக்னி சிறகுகள்.. சிந்தனைக்கு தீப்பொறி கொடுத்த வாழ்க்கை வரலாறு
வெற்றியின் ஒளி!
உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
உணவும் , வளமும், வாழ்வாதாரமும்.. பின்னே மக்காச்சோளமும்!
இதயத்தை செதுக்கி.. தடுமாறாமல் வழிகாட்டி.. A Teacher Is More Than a Teacher
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி
வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?
{{comments.comment}}