Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

Nov 21, 2024,05:10 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரத்தில் நேற்று திடீரென மேக வெடிப்பு காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. அதேபோல் திருச்செந்தூர், நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யம், தென்காசி, ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. 



இதற்கிடையே தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இதன் காரணமாக நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும்

இன்று மிக கனமழை: 

நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று கனமழை:

தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 25ஆம் தேதி  கனமழை:

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ஆகிய ஐந்து மாவட்டங்களில் நவம்பர் 25ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 26, 27 ஆம் தேதி மிக கனமழை:

கடலூர், தஞ்சை, நாகை ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர், ஆகிய ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 26,27 கனமழை: 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

news

முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!

news

டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு

news

அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!

news

நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி

news

கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?

news

சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்

news

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

அதிகம் பார்க்கும் செய்திகள்