சென்னை: தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடலோரப்பகுகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, இன்று காலை அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறைய்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆரஞ்ச் அலர்ட்:

நீலகிரி, கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மஞ்சள் அலர்ட்:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அவ்வப்பொழுது பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும்.
டிசம்பர் 4: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 5: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 6 முதல் 9 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக வெப்பநிலை 24-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வின்டோஸ் அப்டேட் குழப்பத்தால்.. நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து.. சேவைகளில் தாமதம்
அமெரிக்காவை அதிர வைக்கும் Bomb Cyclone.. பல ஊர்களை பனி மூடியது!
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்
ரூ. 93,000க்கு வாங்கிய காரின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
மீண்டும் நீலகிரியில் வேட்டை .. 4 மாதமாக ஆட்டம் காட்டி வந்த புலி சிக்கியது!
மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளாக இல்லாமல் மக்கள் பிரதிநிதியாக மாறப்போகிறீர்கள்: முதல்வர் முக ஸ்டாலின்
Sir/Mam.. joke.. kadi joke.. சங்கடப்படாம சிரிச்சுட்டுப் போங்க.. மழை டென்ஷன் குறையும்!
தனுஷ்கோடி மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை ஆமைகள்.. என்ன செய்தார்கள் தெரியுமா
ஊத்தங்கரையில் குவிந்து கிடக்கும் பிரச்சினைகள்.. நாடாளுமன்றத்தில் கிளப்ப மக்கள் கோரிக்கை
{{comments.comment}}