சென்னை: பிரபல காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணமடைந்தார். அவருக்கு வயது 66 ஆகும்.
காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ஆர்.எஸ்.சிவாஜி. கமல்ஹாசனின் தீவிர ரசிகர். தனது திரையுலக வாழ்க்கையே கமல்ஹாசன் கொடுத்த மிகப் பெரிய பரிசு என்று சொல்லக் கூடியவர். கமல்ஹாசன் மீது தீராத பக்தியும் கொண்டவர்.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் சிவாஜியும், ஜனகராஜும் இணைந்து நடிப்பில் கலக்கியிருப்பார்கள். கமல்ஹாசனுக்கு அடுத்து அதிகம் பேசப்பட்டது இவர்களது காமெடிதான். அந்த அளவுக்கு இருவரும் பிரித்து மேய்ந்திருப்பார்கள். குறிப்பாக ஜனகராஜின் செயல்களைப் பார்த்து வியந்து வியந்து, "நீங்க எங்கேயே போய்ட்டீங்க சார்" என்று சிவாஜி சொல்லும் வசனம் மிக மிக பிரபலமானது.
அந்தப் படத்திற்குப் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார் சிவாஜி. காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர பாத்திரங்களிலும் நிறைய நடித்துள்ளார் சிவாஜி. தீவிர சாய் பக்தரான சிவாஜி, உடல் நலமில்லாமல் இருந்து வந்தார். இன்று அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
ஆர்.எஸ். சிவாஜி மரணத்திற்கு திரையுலகினர் அஞ்சலியும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து காமெடி நடிகர்கள் இறந்து வருகின்றனர். மயில்சாமி மறைந்தார், மனோபாலா மறைந்தார். தற்போது ஆர். எஸ்.சிவாஜி விடை பெற்றுள்ளார்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}