முன்னாள் நடிகை ஜெயபிரதாவுக்கு 6 மாதம் சிறை

Aug 12, 2023,09:46 AM IST
சென்னை : பல ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் முன்னாள் நடிகை ஜெயபிரதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக இந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஜெயபிரதா. தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் 300 க்கும் அதிகமான படங்களில் நடித்து பலரின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர். 70, 80 களில் ஏறக்குறைய இந்திய சினிமாவின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த ஜெயபிரதா, பிறகு அரசியலிலும் நுழைந்து கலக்கினார்.



இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது தொழில் பங்குதாரர்களான ராம்குமார் மற்றம் ராஜா பாபு ஆகியோருடன் இணைந்து சென்னையில் தியேட்டர்  ஒன்றை விலைக்கு வாங்கி நடத்தி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரால் தியேட்டர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியவில்லை. நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தியேட்டரை மூடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த தியேட்டரில் பணியாற்றிய ஊழியர்கள், தங்களின் சம்பள பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஈஎஸ்ஐ பணத்தை திருப்பி தரவில்லை என ஜெய பிரதா மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தொழிலாளர் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனும் ஜெய பிரதா, ராம்குமார் மற்றும் ராஜா பாபு மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், ஜெய பிரதா மற்றும் அவரது பங்குதாரர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. இதனால் பதறிப் போன ஜெய பிரதா, தியேட்டர் பணியாளர்களுக்கு அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ஈஎஸ்ஐ பாக்கி பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்தார்.

மேலும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் படி ஜெய பிரதா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இவரது கோரிக்கையை நிராகரித்த சென்னை கோர்ட், ஜெய பிரதாவிற்கு விதித்த 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதத்தை உறுதி செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்