- மஞ்சுளா தேவி
கொச்சி: பழம்பெரும் மலையாள நடிகைகளில் ஒருவரான சுப்புலட்சுமி அவர்கள் நேற்று காலமானார். இவர் நிறைய விளம்பரப் படங்களில் நடித்தும் உள்ளார்.
நடிகை சுப்புலட்சுமி கொச்சியை சேர்ந்தவர். இவருக்கு வயது 87. இவருடைய கணவர் கல்யாண கிருஷ்ணா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை சுப்புலட்சுமி, சமூக வலைதள பிரபலம் சௌபாக்யா வெங்கடேஷின் பாட்டியும் ஆவார். இவர் அனைவராலும் "சுப்பு பாட்டி" என செல்லமாக அழைக்கப்பட்டவர்.
மலையாள நடிகையான சுப்புலட்சுமி தமிழில் பல்வேறு திரைப்படத்திலும், விளம்பரத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் சர்ஃப் எக்சல் விளம்பரம் மூலம் பிரபலமானவர். இவர் பாட்டியாக நடித்ததற்காக பாராட்டு பெற்றவர். இவர் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் தி இன் நேம் ஆப் கார்ட் என்ற ஆங்கில படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வயது மூப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.
இதுகுறித்து செளபாக்கியா வெங்கேடேஷ் கூறுகையில், என் சுப்பு..என் குழந்தை.. என் அம்மா.. அவர்களை இழந்தேன்.. 30 ஆண்டுகள் என் வலிமை மற்றும் அன்பாக இருந்தவர் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சுப்புலட்சுமியின் இரங்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}