திருச்சூர்: பழம்பெரும் பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் காலமானார். ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு, தாலாட்டுதே வானம் உள்ளிட்ட ஏராளமான புகழ் பெற்ற பாடல்களைப் பாடிய வானம்பாடி தனது மூச்சுக் காற்றை நிறுத்தியுள்ளது ரசிகர்களை சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பி. ஜெயச்சந்திரன் தென்னிந்தித் திரையுலகில் தனி முத்திரை பதித்த மிகப் பெரிய பாடகர். அவர் பாடிய அத்தனை மொழியிலும் அந்த மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பாடிய சாதனைக்குரியவர், பெருமைக்குரியவர் பி.ஜெயச்சந்திரன்.
80 வயதான ஜெயச்சந்திரன் கடந்த சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உபாதைகளைச் சந்தித்து வந்தார். திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் இன்று மாலை மரணமடைந்தார்.
மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 16,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் ஜெயச்சந்திரன். ஜி. தேவராஜன், எம்.எஸ். பாபுராஜ், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் என அவர் பாடாத இசையமைப்பாளர்களே கிடையாது. அத்தனை பேரின் இசையிலும் பாடிய பெருமைக்குரியவர்.
சிறந்த பாடகருக்கான தேசிய விருது, கேரளா மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகள் உள்பட ஏராளமான விருதுகள் அவரது பாடல் திறமையை அலங்கரித்துள்ளன. 2 முறை தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்ற பெருமைக்கும் உரியவர் ஜெயச்சந்திரன்.
1944ம் ஆண்டு கொச்சியில் பிறந்தவரான பி.ஜெயச்சந்திரன் கொச்சி ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஹிட் தமிழ்ப் பாடல்கள்
1973ம் ஆண்டு முதல் முறையாக தமிழில்பாடத் தொடங்கினார் ஜெயச்சந்திரன். அவரை தமிழில் அறிமுகப்படுத்தியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். அவரது இசையில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் ஜெயச்சந்திரன். பொன்னென்ன பூவென்ன கண்ணே, வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள், தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ என்று அந்தப் பாடல்களின் வரிசை மிக நீண்டது.
அதேபோல இசைஞானி இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம் ஏராளம். மாஞ்சோலைக் கிளிதானோ, தாலாட்டுதே வானம், ஒரு வானவில் போல என் வாழ்விலே வந்தாய், சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன், காளிதாசன் கண்ணதாசன், பூவிலே மேடை நான் போடவா, மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஒவ்வொன்றிலும் அசத்தியிருப்பார் ஜெயச்சந்திரன்.
தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், கீரவாணி, வித்யாசாகர் முதல் ஜி.வி. பிரகாஷ் வரை பாடிய பெருமைக்குரியவர் ஜெயச்சந்திரன். இவரது தமிழ் உச்சரிப்பு அப்படி இருக்கும். தமிழை அட்சர சுத்தமாக உச்சரித்துப் பாடிய மலையாளத்து வானம்பாடி இன்று தனது இசை மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}