டெல்லி: நாடுகள் மீது படையெடுத்த மன்னர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், அந்த நாட்டின் கலாச்சாரம், மொழியை அழித்தனர். மிகக் குரூரமாக நடந்து கொண்டனர். இதுதான் ஒரு நாட்டை வெல்ல சரியான வழி. எனவே நமது கலாச்சாரம், மொழியை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த 98வது அகில பாரதிய மராத்தி சாஹித்ய சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெகதீப் தங்கர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடுகளை ஆக்கிரமித்த மன்னர்களும், ஆக்கிரமிப்பாளர்களும் மிகவும் கொடூரமாக இருந்தனர். மொழியையும் கலாச்சாரத்தையும் அவர்கள் அழித்தனர். இதுதான் ஒரு நாட்டை வெல்ல சரியான வழியாகும். எனவேதான் அவர்கள் அதைச் செய்தனர். இந்தியாவுக்குள் பல நூறாண்டுகளுக்கு முன்பு ஊடுறுவியவர்கள் இதைத்தான் செய்தனர். நமது வழிபாட்டுத் தலங்களை இடித்து விட்டு அவர்களது வழிபாட்டுத் தலங்களை கட்டமைத்தனர்.

காட்டுமிராண்டித்தனம் கட்டறுத்து விடப்பட்டது. மிகவும் மோசமாக தங்களது ஆதிக்கத்தை அவர்கள் நிலைநாட்டினர். ஒரு நாடானது அதன் கலாச்சார வளம், கலாச்சார நியமங்கள், மொழிச் செழுமையால்தான் அடையாளம் காணப்படுகிறது. அதை அழிப்பதே அந்த நாட்டை எளிதாக வெல்ல முடியும். இதைத்தான் அந்தக் காலத்தில் செய்தனர்.
எனவே நமது கலாச்சாரத்தையும், மொழியையும் அரசியல் சாசனத்தை நிறுவிய நமது மூதாதையர்கள் காட்டிய வழியில் காக்க வேண்டியது நமது கடமையாகும் என்றார் ஜெகதீப் தங்கர்.
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
{{comments.comment}}