தேவகோட்டை : கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியும், செல்வத்திற்கு உரிய லட்சுமி தேவியும் ,வீரத்துக்குரிய பார்வதி தேவியையும், போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகை தான் நவராத்திரி. அதன் நிறைவு நாளை தான் விஜய் தசமியாக கொண்டாடுகிறோம்.
புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழித்து வரும் பத்தாம் நாள் கொண்டாடப்படும் விழா விஜயதசமி ஆகும். விஜய் என்பது வெற்றி தசமி என்பது பத்தாவது நாள். இதனால்தான் விஜயதசமி என பெயர் பெற்றது.

வெற்றி தரும் விஜயதசமி நன்னாளில் கல்வி ,கலை என எதனை தொடங்கினாலும் வெற்றியாக முடியும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பண்டைய காலம் முதல் இன்று வரை விஜயதசமி நாளில் ஆரம்பக் கல்வியை கொடுப்பதே இதன் சிறப்பாகும். இது வித்தியாரம்பம் எனவும் அழைக்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா பண்டிகையையும் இந்நாளில் தான் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியான இசை ,ஓவியம், நடனம், எழுத்து ,பிற மொழி பேசுதல் மற்றும் ஒரு தொழிலை தொடங்குதல் போன்றவற்றை செயல்படுத்தினால் சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகின்ற பழக்கமாகும் .

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியிலும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் விஜயதசமி அன்று புதிய மாணவர்கள் சேர்க்கையான, கல்வி கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
ஆசிரியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதர், முத்தமினாள் ஆகியோர் புதிதாய் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து நெல்மணிகளில் 'அ'கரம் எழுத வைத்து அ ஆ என சொல்ல வைத்தனர். பின்னர் புதிய மாணவர்களுக்கு திருக்குறள் வாசிப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக புதிதாய் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}