சென்னை : விஜய் நடிக்கும் 69வது படத்திற்கு ஜனநாயகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலுடன் இன்று ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். காலையில் ஒரு ஸ்டில்லை வெளியிட்ட படக் குழு, மாலையில் இன்னொரு அதிரடியான ஸ்டில்லையும் வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு வெறியேற்றியுள்ளது.
நடிகர் விஜய்யின் 69வது படத்தை டைரக்டர் ஹச்.வினோத் இயக்க போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. அரசியல், ஆக்ஷன், த்ரில்லர் படமாக இயக்கப்பட உள்ள இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
விஜய் 69 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்த படம் தான் விஜய் முழு நேரமாக அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்க உள்ள கடைசி படம் என சொல்லப்படுவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறி உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி அலுவலகம் அமைந்துள்ள பனையூர் பகுதியிலேயே நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய் 69 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 26ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் நேற்று முதலே சோஷியல் மீடியாக்களில் Thalapaty69 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வந்தது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்த படி, காலை 11 மணிக்கு தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது.
விஜய்யின் 69வது படத்திற்கு ஜன நாயகன் என பெயரிடப்பட்டுள்ளது. பின்னால் வெள்ளை உடை அணிந்த பெரிய அளவிலான மக்கள் கூட்டம் வாழ்த்து கோஷமிட்டபடி நிற்க, உயரமான இடத்தின் மீது நின்று மக்களுடன் சேர்ந்து விஜய் ஸ்டையிலாக இடுப்பில் கை வைத்தபடி செல்ஃபி எடுத்துக் கொள்வது போன்ற காட்சியுடன் இந்த ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய பலமான அடித்தளத்தை இந்த படம் ஏற்படுத்தும் என இந்த ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படத்தின் டைட்டிலே சொல்கிறது.
ஜன நாயகன் டைட்டில் வெளியிடப்பட்டவுடன் எக்ஸ் தளத்தில் #Thalapathy69FirstLookOnJan26, #JanaNayagan, #ஜனநாயகன் ஆகிய ஹெஷ்டேக்குகள் டிரெண்டாக துவங்கின. நெய்வேலியில் தன்னை சந்திக்க குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு முன்பு எடுத்த செல்பி போன்ற ஸ்டில் இது என்பதால் பல வகையிலும் இதை கனெக்ட் செய்யத் தொடங்கினர் ரசிகர்கள்.

இந்த நிலையில் மாலை 4 மணியளவில் 2வது லுக்கையும் வெளியிட்டது படக் குழு. சிவப்பு நிற பின்னணியில் சாட்டையை சுழற்றியபடி விஜய் இருப்பது போன்ற ஸ்டில் இது. கூடவே எம்ஜிஆர் பாடிய பாடலான நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடல் வரியையும் சேர்த்துக் கோர்த்து தெறியாக வெளியாகியுள்ளது இந்த 2வது லுக் ஸ்டில். இதுவும் வைரலாகியுள்ளது.
விஜய் யாரைப் பார்த்து சாட்டையைச் சுழற்றுகிறார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. ஆக மொத்தம் விஜய்யின் இந்த ஜனநாயகன், படு சுளீரென அரசியல் பேசப் போவது மட்டும் உறுதியாகி விட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை
Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!
ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
{{comments.comment}}