சென்னை: கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நாளை பேசவுள்ளார். இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது மக்கள் சந்திப்பைத் தொடங்கியுள்ளார். திருச்சியில் தொடங்கிய அவரது சந்திப்பு இப்போது அனல் பறக்க பரபரப்பைக் கூட்டத் தொடங்கியுள்ளது. திருச்சி, அரியலூரில் கூட அவரது பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நாகப்பட்டனத்தில் அவர் அனல் கக்கப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெகவின் அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்பமான சம்பவங்களாக விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகள் அமைந்தது போல விஜய்யின் நாகைப் பேச்சும் அரசியல் களத்தில் அலைகளை உருவாக்கி விட்டது. இந்த நிலையில் அடுத்தடுத்து அவர் பேசப் போகும் பேச்சுக்களும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
குறிப்பாக நாளைய அவரது பிரச்சாரம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், நாளைய நி்கழ்ச்சி நிரலில் கரூரும் இடம் பெற்றிருப்பதுதான். நாமக்கலில் நாளை முதலில் பேசவுள்ளார் விஜய். அடுத்து கரூரில் பேசப் போகிறார். இதில் கரூர் கூட்டத்துக்குப் பெரும் இழுபறிக்குப் பின்னரே அனுமதி கிடைத்துள்ளது. பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கரூரில் விஜய் என்ன பேசுவார் என்பது இப்போது பெரும் ஆர்வத்தைக் கிளறியுள்ளது. நிச்சயம் செந்தில் பாலாஜி குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பேச்சும், நாகை பேச்சு போல பரபரப்பைக் கிளப்புமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதற்கிடையே, நாளை சனிக்கிழமை விஜய் கூட்டங்கள் நடைபெறவுள்ளதால், நாமக்கல், கரூரில் இப்போதே தவெக தொண்டர்கள் ஆர்வத்துடன் தயாராக ஆரம்பித்து விட்டனர். அதேபோல நேரலையில் அதைக் கண்டு களிக்க தமிழ்நாடு முழுவதும் இப்போதே ஆர்வமும் கிளர்ந்தெழ ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்.. டெல்லி யுபிஎஸ்சி இன்று ஆலேசானை!
தவெக கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக, திமுக கொள்கைகளை எடுத்து கொண்டு வந்துள்ளார் விஜய்: சீமான் காட்டம்!
சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல..புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? அன்புமணி ராமதாஸ்
நவராத்திரி சிறப்புகள்.. முப்பெரும் தேவியர் வழிபாடும், அதன் முக்கியத்துவமும்!
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றைக்கு சவரனுக்கு ரூ.320 உயர்வு
விஜய் பிரச்சாரம்.. கரூரில் கிடைத்தது பச்சைக் கொடி.. நாளை என்ன பேசுவார்?
மருந்துகளுக்கு 100 சதவீத வரி.. டிரம்ப்பின் அடுத்த அதிரடி.. இந்தியாவுக்குப் பாதிப்பு வரும்!
இன்று நவராத்திரி 5ம் நாள்...அலங்காரம், மலர், நைவேத்தியம் முழு விபரம் இதோ
{{comments.comment}}