"கம்மி"யான டைம்.. அழகான அவுட்புட்.. ஹிட்லர் குறித்து சிலாகித்துப் பேசிய விஜய் ஆண்டனி!

Jan 19, 2024,04:00 PM IST

சென்னை:  இயக்குனர் தனா இயக்கிய வானம் கொட்டட்டும் படத்திற்கு நான் மிகப்பெரிய ஃபேன். அப்படிப்பட்ட இயக்குனர், ஹிட்லர் படத்தை, குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயர செல்வார் என நடிகர் விஜய் ஆண்டனி புகழாரம் சூட்டியுள்ளார்.


படைவீரன் மற்றும் வானம் கொட்டட்டும் படங்களை இயக்கியவர் இயக்குனர் தனா. இவர் இயக்கத்தில்  நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹிட்லர். இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கவுதம் மேனன், சரண் ராஜ்,  ரெடின் கின்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குனர் தமிழ் ஆகியோரும் நடித்துள்ளனர்.




செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி ராஜா மற்றும் டிஆர் சஞ்சய் குமார் தயாரித்துள்ளனர். இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். 

பரபரப்பான திரில்லர் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. வித்தியாச முறையில் உள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் ஹிட்லர் திரைப்படம் குறித்து படக் குழுவினர் செய்தியாளர்களிடம் விவரித்துப் பேசினர். 




நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. ஒரு மிகச்சிறப்பான படைப்பில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி. இயக்குநர் தனா இதுவரை நான் நடித்த படத்தில் இல்லாத புதிய ரியாக்சனை இப்படத்தில் என்னிடம் கொண்டுவந்தார். தனாவிற்கு நன்றி. 


விஜய் ஆண்டனி சாருடன் பல காலமாக இணைந்து  நடிக்க ஆசைப்பட்டேன். இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. மக்களை அடிமைக்குள்ளாக்கினான் ஹிட்லர், இந்த ஹிட்லர் மக்களின் நன்மைக்காக அதிகாரத்தை கையில் எடுத்துள்ளான். பார்த்து ரசியுங்கள் நன்றி என கூறியுள்ளார். 


நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசும்போது, இந்த படம் பேரு தான் ஹிட்லர் ஆனால் டைரக்டர் சாஃப்ட். ஹீரோ சாஃப்ட். ஹீரோயின் சாஃப்ட். ஆனால் பெயர் மட்டும் ஹிட்லர். இந்தப் படம் சூப்பராக இருக்கும். விஜய் ஆண்டனி சார் படத்தில், இது வித்தியாசமாக இருக்கும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.


நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது:




இயக்குநர் தனாவின் வானம் கொட்டட்டும் படத்திற்கு மிகப்பெரிய ஃபேன். நானும் ராஜா சாரும் யாரை வைத்து அடுத்த படம் எடுக்கலாம் என்றபோது இருவரிடமும் வந்த பெயர் தனா. குறைந்த காலத்தில் ஒரு அழகான அவுட்புட்டை தந்துள்ளார். அவர் இன்னும் உயரம் செல்வார். 


ரெடின் கிங்ஸ்லி திரையில் வேறொரு நடிகராக காமெடியில் அசத்துகிறார். ரியா சுமனுக்கு இவ்வளவு தமிழ் தெரியுமென்பதே தெரியாது. வெரி ஸ்வீட், சிம்பிள் மிகச் சிறந்த நடிகை. டாணாக்காரன் தமிழ், கௌதம் மேனன் இருவருடனும் நடித்தது மகிழ்ச்சி. 


விவேக் பிரசன்னா நடிப்பு மிகவும் பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள். விவேக், மெர்வின்  இருவரும் அருமையான இசையைத் தந்துள்ளனர். ஆக்ஸிடெண்டுக்குப் பிறகு என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார் ஸ்டண்ட் டைரக்டர் முரளி , அவர்களுக்கு நன்றி.


ஒளிப்பதிவாளர் நவீன்குமார் என் அடுத்த படத்திற்கும் அவர் தான் கேமராமேன், சிறந்த ஒளிப்பதிவாளர். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்