சென்னை: என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இசை மட்டுமல்ல நடிப்பிலும் கலக்கியவர். நான், சலீம், சைத்தான், பிச்சக்காரன் போன்ற இவரது படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன. நடிகராக மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர், எடிட்டர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டராக வளம் வந்தவர்.மேலும், பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.
இந்நிலையில், குட் டெவில் புரொடக்சன் சார்பில் விஜய் ஆண்டனி ரோமியோ படத்தை தயாரித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு ரோமியோ படம் வெளியானது. இந்த படம் குறித்து விஜய் ஆண்டனி இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என கூறியுள்ளார்.
இதற்கு ப்ளூ சட்டை மாறன் நக்கலான பதிலடி கொடுத்துள்ளார். அவரும் ஒரு போஸ்ட் போட்டு எரியும் தீயில் பெட்ரோலையும், டீசலையும் கலந்து ஊற்றி வேடிக்கை காட்டி வருகிறார்.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
{{comments.comment}}