வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

May 30, 2025,05:57 PM IST

சென்னை: அடுத்த தேர்தல் சமயத்தில் வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க. அதெல்லாம் உங்க கிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம்தான். என்ன பண்ணப் போறீங்க என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கேட்டுள்ளார்.


மாமல்லபுரத்தில், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, கல்வி விருது வழங்கும் விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்  சுமார் 2000 பேர் பங்கேற்றுள்ளனர்.


கடந்த இரண்டு வருடங்களாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். விஜய் கையால் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கிலும், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.


அந்த வகையில் மூன்றாவது வருடமாக 2025 ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா மூன்று கட்டங்களாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த விழாவில் வழக்கம் போல விஜய் தனது பேச்சுடன் தொடங்கி வைத்தார்.


விஜய்யின் இன்றைய பேச்சில் அரசியல் பேச்சும் முக்கியமாக இடம் பெற்றது. அவரது பேச்சிலிருந்து சில முக்கியமான துளிகள்..




அடுத்த தேர்தலின்போது வண்டி வண்டியா கொட்டப் போறாங்க. அது அத்தனையும் உங்ககிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம்தான். என்ன பண்ணப் போறீங்க. என்ன பண்ணனும்னு உங்களுக்கே தெரியும். அதை நான் சொல்ல வண்டியதில்லை. தேர்தலின்போது யாரும் காசு வாங்காம ஓட்டுப் போடுங்க. இதை உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லுங்க. 


உங்க குழந்தைகளுக்கு எதையும் பிரஷர் போடாதீங்க. எத்தனை தடைகள் வந்தாலும் அவங்களுக்குப் பிடிச்சதை செய்றப்போ அதில் சாதிச்சுக் காட்டுவாங்க.


சாதி மதத்தை வைத்து பிரிவினைவாதம் செய்வாங்க. அதுக்குள்ள போய்ராதீங்க. அந்த சிந்தனை உங்களையோ மனதையோ டிஸ்டர்ப் பண்ற அளவுக்கு அனுமதிக்காதீங்க. இயற்கையில் சாதி இருக்கா மதம் இருக்கா.. விவசாயிகள் சாதி மதம் பார்த்தா விளைவிக்கிறாங்க.. தொழிலாளர்கள் சாதி மதம் பார்த்தா வேலை செய்கிறார்கள். எப்படி போதைப் பொருட்களை அறவே ஒதுக்கி வைக்கிறோமோ அதேபோல சாதி மதத்தையும் தூரமாக ஒதுக்கி வச்சுருங்க. அதுதான் எல்லோருக்கும் நல்லது. 


தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி பண்றாங்க.  சிவில் சர்வீஸ் தேர்வில் கூட சாதி சாயம் பூசுவது போல கேள்வி கேட்டிருக்காங்க. இதை வன்மையாக கண்டிக்கணும். 


இந்த உலகத்துல எது சரி எது தவறு எந்று அனலைஸ் பண்ணிப் பார்த்தே போதும். ரொம்பெல்லாம் எமோஷனல் ஆகாதீங்க. அறிவியல் பூர்வமாக சிந்திக்க முயற்சி பண்ணுங்க. எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா என்றார் விஜய்.


தனது பேச்சின்போது வழக்கம் போல நீட் குறித்தும் குறிப்பிட்டார் விஜய் நீட் மட்டுமா வாழ்க்கை அதைத் தாண்டி நிறைய இருக்கிறது என்றும் விஜய் தெரிவித்தார்.


2 மாணவிகளுக்கு வைர தோடு


12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாவட்ட மாணவி ஓவியாஞ்சலிக்கு வைர தோடு வழங்கிக் கெளரவித்தார் விஜய்.


அதேபோல 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்த அரியலூர் மாவட்ட மாணவி சோபியாவுக்கும் வைர தோடு வழங்கி பாராட்டினார் விஜய்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16, 2025... இன்று பணம் தாராளமாக வரும்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

அதிகம் பார்க்கும் செய்திகள்