விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து

Jun 22, 2025,01:08 PM IST
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய்யின் 51வது பிறந்த நாளை அவரது கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் உலகம் முழுவதும் விதம் விதமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் 51வது பிறந்த நாள் இன்று. தனது பிறந்த நாளை பெரிதாக கொண்டாடுவதில்லை விஜய். ஆனால் தற்போது அவர் அரசியல் தலைவராகி விட்டதால் அவரது பிறந்த நாளை கட்சியினரும், ரசிகர்களும் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கியும், இனிப்பு வழங்கியும், வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டும் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதுதொடர்பான புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. போலீஸ் சீருடையில் அதில் விஜய் காணப்படுகிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். இந்த சந்தோஷத்துடன் பிறந்த நாளை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினரும் விஜய்க்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.




"நாளைய தீர்ப்பு"- இல் ஆரம்பித்து "அழகிய‌ தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்.


தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்!  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!


தமிழக வெற்றிக்கழகத் தலைவர்  தம்பி விஜய் 51-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.


இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான, சகோதரர் திரு 
விஜய்  அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு விஜய்  அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரு.விஜய் அவர்கள் நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்துடனும், மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!

news

பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!

news

சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!

news

ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

news

அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!

news

சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி

news

மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்