வந்தார் நடிகர் விஜய்.. இந்த முறை சைக்கிளுக்கு லீவு.. காரில் வந்து நீலாங்கரையில் வாக்களித்தார்!

Apr 19, 2024,12:26 PM IST

சென்னை: அனைவரும் ஆ்வலுடன் எதிர்பார்த்திருந்த நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் இன்று ரசிகர்கள் புடை சூழ நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடிக்கு வருகை தந்து வாக்களித்தார்.


ஒவ்வொரு வருடமும் நடிகர் விஜய் தனது வீட்டிற்கு அருகே உள்ள வாக்கு மையத்தில் வாக்களிப்பார். கடந்த முறை விஜய் சைக்கிளில் பயணம் செய்து தனது வாக்கினை செலுத்த வந்தார். இவரை காண ரசிகர் பட்டாளம்  பெருமளவில் திரண்டது. அப்போது அவரது சைக்கிளில் கருப்பு சிவப்பு நிறம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் திமுகவுக்குத்தான் வாக்களிக்க சொல்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. 




இந்த நிலையில் இந்த வருடமும் நடிகர் விஜய் என்ன கலர் சட்டை போடுவார், சைக்கிளில் வருவாரா அல்லது காரில் வருவாரா அல்லது எப்படி வருவார்..  எப்போது வருவார்.. என்ன குறியீட்டை வெளிப்படுத்துவார் என்று  ரசிகர்கள் செம உற்சாகத்துடன் காத்திருந்தனர். 


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கோட்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்காக ரஷ்யாவில் தற்போது இறுதி கட்டப்பட பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அரசியலிலும் குதித்துள்ள விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார். கமிட்டான இரண்டு படங்களில் விரைவாக நடித்து முடித்துவிட்டு அரசியலில் முழுமையாக இறங்க தயாராக உள்ளார்.


இந்த சூழ்நிலையில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை, கடமை என பல்வேறு திரைப்படங்களில் பேசி நடித்தவர் நடிகர் விஜய். எனவேதான் தனது வாக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து ரஷ்யாவில் இருந்து தற்போது சென்னைக்கு வந்தார் விஜய். அவருடன் கோட் படக்குழுவினரும் சென்னை வந்தடைந்தனர்.  இந்த நிலையில் பிற்பகல் 12. 30 மணியளவில் தனது வீட்டிலிருந்து காரில் வாக்குச் சாவடிக்குப் புறப்பட்டார் நடிகர் விஜய். வழியெங்கும் அவரை நூற்றுக்கணக்கான ரசிகர்களும் கூடவே வந்தனர். இதனால் வழக்கம் போல வாகன அணிவகுப்புடன் வாக்குச் சாவடிக்கு வந்த விஜய் அங்கு தனது வாக்கைப் பதிவு செய்தார்.


விஜய் இந்த முறை எந்தவிதமான குறியீட்டையும் வெளிப்படுத்தவில்லை என்பதால் பலரும் ஏமாற்றமடைந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்