தானே முதல்வர் வேட்பாளர்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய் புரட்சி படைப்பார்.. இந்தியா டுடே தகவல்!

Aug 08, 2025,03:33 PM IST

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி சேருவதில் விஜய்க்கு விருப்பம் இல்லை. மேலும் தனது தலைமையில்தான் கூட்டணி என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார். அவர் ஒரு மவுனப் புரட்சியை நோக்கி நடை போடுவதாக தெரிகிறது என்று இந்தியா டுடே அசோசியேட் எடிட்டர் பிரமோத் மாதவ் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் கணக்குகளைப் போடுவதில் மும்முரமாக உள்ளன. யாருடன் கூட்டணி சேருவது என்ற வேலைகளில் படு தீவிரமாக உள்ளன. சில கட்சிகள் பகிரங்கமாக கூட்டணி தொடர்பான விவகாரங்களில் ஈடுபடுகின்றன. பல கட்சிகள் இதை ரகசியமாக செய்து வருகின்றன.


தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் மிகவும் சைலன்ட்டாக தனது வேலைகளைச் செய்து வருகிறார். அவர் என்ன கணக்கில் உள்ளார் என்பதே தெளிவாகத் தெரியவில்லை. எதற்கும் அலட்டிக் கொள்வது போலவும் தெரியவில்லை. கூட்டணிகளைத் தேடி பல கட்சிகள் தாறுமாறாக ஓடிக் கொண்டுள்ள நிலையில்  விஜய்யை நோக்கி யாரும் இதுவரை வந்தது போலத் தெரியவில்லை. ஆனால் இதுகுறித்து விஜய் கவலைப்படுவது போலவும் தெரியவில்லை.




இந்த நிலையில் இந்தியா டுடே இதழின் அசோசியேட் எடிட்டர் பிரமோத் மாதவ் ஒரு நிகழ்ச்சி அழைப்புக்காக விஜய்யை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் விஜய் மனம் விட்டு அரசியல் பேசியுள்ளார். அதுதான் இப்போது வைரலாகி வருகிறது.


இதுதொடர்பாக பிரமோத் மாதவ் கூறுகையில், விஜய்தான் முதல்வர் வேட்பாளர். அதில் விஜய் தெளிவாக இருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய் விரும்பவில்லை. தவெக தலைமையில்தான் கூட்டணி என்பதிலும் தெளிவாக இருக்கிறார். மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். அதை நோக்கி தெளிவாக நடைபோட்டு வருகிறார்.  




தன் மீதான பல்வேறு விமர்சனங்கள் குறித்தும் அவர் கவலைப்படவில்லை. குறிப்பாக திமுகவின் பேச்சுக்களால் அவர் தடுமாறவில்லை, அச்சமடையவும் இல்லை. அதைப் பொருட்படுத்தவும் இல்லை. 


சுருங்கச் சொல்வதானால்,  தனது தலைமையில்தான் கூட்டணி, தானே முதல்வர் வேட்பாளர், அதிமுக பாஜகவுடன் கூட்டணி கிடையாது, திமுக அரசை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் இது மட்டுமே விஜய்யின் இலக்காக உள்ளது. அதில் அவர் உறுதியுடன் இருக்கிறார், தெளிவாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.


தவெகவின் மதுரை மாநில மாநாட்டில் தனது கட்சியின் பல்வேறு அதிரடி முடிவுகளையும் விஜய் வெளியிடக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கூட்டணி குறித்து இன்னும் தெளிவான முடிவுகளை விஜய் வெளியிடலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK-விலிருந்து அஸ்வின் வெளியேறப் போகிறாரா.. சஞ்சு சாம்சன் உள்ளே நுழையப் போகிறாரா?

news

தேமுதிகவில் என்ன நடக்கிறது?.. பிரேமலதாவுடன் கே.சி. வீரமணி சந்தித்தது எதற்காக??

news

தானே முதல்வர் வேட்பாளர்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய் புரட்சி படைப்பார்.. இந்தியா டுடே தகவல்!

news

ராமதாஸ், அன்புமணி நேரில் வாங்க.. தனியாக பேச வேண்டும்.. நீதிபதி உத்தரவு.. அடுத்தது என்ன?

news

தவெக மாநாட்டிற்கு கூட்டம் சேர்ந்தால் என்ன நடக்கும்.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்?

news

BREAKING: 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. இந்த ஆண்டே அமல்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

news

டெல்லியில் ஷாக்கிங்.. பார்க்கிங்கில் தகராறு.. நடிகை ஹூமா குரேஷியின் உறவினருக்கு நேர்ந்த விபரீதம்

news

டிரம்ப் வரி எதிரொலி.. இந்திய ஆடைகளை வாங்கவதை நிறுத்தி வைக்கும் அமேசான், வால்மார்ட்

news

ஆகஸ்ட் 12ல் தாயுமானவர் திட்டம் துவக்கம்...யாருக்கு இந்த திட்டம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்