19 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம்.. ஆளுக்கு ஒரு வெள்ளி நாணயம் கொடுத்து விஜய் வாழ்த்து!

Jan 24, 2025,07:42 PM IST

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், புதிதாக 19 மாவட்டங்களுக்கு செயலாளர்களை விஜய் நியமித்துள்ளார். புதிய மாவட்டச் செயலாளர்களுக்கு ஆளுக்கு ஒரு வெள்ளி நாணயத்தை வழங்கி அவர் வாழ்த்தினார்.


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய் நடித்து கடைசியாக வெளியான கோட் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இப்படம் கடந்த ஆண்டு பாக்ஸ்  ஆபீஸ் கலெக்ஷனில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து  விஜய் 69 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படமே இவருக்கு தமிழ் சினிமாவில் கடைசி படமாகும்.


கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் விஜய். இந்த புதிய கட்சிக்கு அனைத்து தரப்பிலும் ஆதரவு பெருகி, இக்கட்சியில் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாகமடைந்தனர். 




மாநாட்டில் விஜயின் பரபரப்பான பேச்சு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தனது அரசியல் வியூகங்களை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். மறுபக்கம்  தமிழ் சினிமாவின் கடைசி படமான விஜய் 69 படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை சந்தித்து அப்பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அங்கு விஜய் பேசிய  கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் சூட்டை கிளப்பியுள்ளது. 


இதற்கிடையே இக்கட்சியில் இணைந்த உறுப்பினர்களை மாவட்ட செயலாளராக நியமிக்கும் பணிகளில் தவெக தலைவர் விஜய் தீவிரமாக செயல்பட்டு அதற்காக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி  கட்சியை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின்  மாவட்ட செயலாளர்கள் முதல்  பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 19 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களை விஜய் அறிவித்துள்ளார்.


பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்  புதிய மாவட்டச் செயலாளர்களை இன்று விஜய் சந்தித்து அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக யாரிடமும் லஞ்சம் வாங்கக் கூடாது என்று அவர் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் நியமன உத்தரவை அவர்களுக்கு வழங்கி விஜய் கூடவே தனது உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தையும் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கி வாழ்த்தினாராம்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாக அமைப்பு விவரம்




1. மாவட்டச் செயலாளர்

2. மாவட்ட இணைச் செயலாளர்

3. பொருளாளர்

4. துணைச் செயலாளர் (2 பேர்)

5. செயற்குழு உறுப்பினர்கள் (10 பேர்)


இதுதான் ஒரு மாவட்ட நிர்வாகத்தின் கட்டமைப்பு. இதற்கான நியமன உத்தரவுகளை தற்போது விஜய் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட்ட மாவட்டச் செயலாளரிடம் வழங்கியுள்ளார். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரையும் நேரில் சந்தித்து அவர்களிடம் பேசி இந்த உத்தரவு நகலையும் அவர்களிடம் அவர் வழங்கினார். 


19 மாவட்டச் செயலாளர்கள் யார் யார்?


இதுதொடர்பாக தற்போது விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மாவட்ட நிர்வாகிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.


முதல் கட்டமாக நியமிக்கப்பட்டுள்ள 19 மாவட்டச் செயலாளர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அவர்களின் பட்டியல்


கோவை மாநகர் - வி. சம்பத்குமார்

கோவை தெற்கு - கே. விக்னேஷ்

சேலம் மத்தி - பார்த்திபன்

ஈரோடு மாநகர் - பாலாஜி

ஈரோடு கிழக்கு - எம். வெங்கடேஷ்

ஈரோடு மேற்கு -ஏ. பிரதீப் குமார்

நாமக்கல் மேற்கு - என். சதீஷ்குமார்

கரூர் மேற்கு - வி.பி. மதியழகன்

கரூர் கிழக்கு - ஜி.பாலசுப்ரமணி

கள்ளக்குறிச்சி கிழக்கு - பரணி பாலாஜி

அரியலூர் - சிவக்குமார்

ராணிப்பேட்டை கிழக்கு - வி.காந்திராஜ்

ராணிப்பேட்டை மேற்கு - ஜி. மோகன்ராஜ்

கடலூர் கிழக்கு - பி. ராஜ்குமார்

கடலூர் மேற்கு - எஸ். விஜய்

கடலூர் வடக்கு - கே. ஆனந்த்

தஞ்சாவூர் தெற்கு - சி. மதன்

தஞ்சாவூர்  மத்தி - விஜய் சரவணன்


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?

news

அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!

news

என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!

news

இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

news

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு!

news

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு...ஆர்சிபி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்