சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக தவெக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கட்சி தொடங்கினார் நடிகரும் தவெக தலைவரும் ஆகிய விஜய். அதன்பின்னர் கட்சி பணிகள் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். கடந்த அக்., 27ம் தேதி இவர் நடந்திய மாநாடு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகவும், தவெக கட்சியின் முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது. கட்சி தொடங்கி ஓராண்டு முடிய உள்ள நிலையில், இதுவரை மாவட்ட செயலாளர்களை நியமிக்காமல் இருந்தார் விஜய். சமீபத்தில் தான் 19 மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்து அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி கட்சிப் பணிகளை முடிக்கி விட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாக வசதிக்காக சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அண்மையில் விஜய் அறிவித்தார். அது குறித்து கடந்த 24ம் தேதி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். அதன் பின்னர் முதல் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை அடக்கிய பட்டியலை விஜய் வெளியிட்டு உள்ளார். அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்கு சாவடிகளுக்கும் ஒரு நிர்வாகிகளை நியமிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே பூத்திற்கு 5 முதல் 7 பேர் நியமிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் ஒரு நிர்வாகியை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சூர்யா முதல் தனுஷ் வரை...டாப் ஹீரோக்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
தை மகள் பிறந்தாள்
தனுஷின் D54 டைட்டில் கர...மிரட்டலாக வெளியான 'கர' டீசர்
விஜய்யால் தான் கரூர் சம்பவம் நடந்தது...டி.கே.எஸ். இளங்கோவன் கடும் விமர்சனம்
தமிழின் பெருமை திருக்குறள்!
விஜய்யின் பொங்கல் வாழ்த்து: தமிழகத்தில் மீண்டும் வெடித்த தமிழ்ப் புத்தாண்டு விவாதம்
மாலன் போற்றும் மாட்டுப் பொங்கல் .. மனிதனும் மாடும் கலந்து களிக்கும்.. கூட்டுப்பொங்கல்!
அறிவு சுரங்கத்தை அகிலத்திற்கு அளித்த ஆதவன்.. திருவள்ளுவர்!
தூக்கம் - தியான நிலை (SLEEP is the Best Meditation)
{{comments.comment}}