விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Sep 02, 2023,02:10 PM IST
சென்னை : தென்னிந்திய நடிகரான விஜய் சேதுபதி, தற்போது இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதியில் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்த விஜய் சேதுபதி தற்போது இந்திய சினிமாவின் டாப் வில்லன் நடிகர்களில் ஒருவராகவும் மாறி உள்ளார். சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவகாற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி.



பல கேரக்டர்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஹீரோவாக உயர்ந்த விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்கள் வசூல் ரீதியாக வெற்றியும் பெற்றுள்ளன.

விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 140 கோடியாம். ஒரு படத்திற்கு சம்பளமாக ரூ.15 கோடி வாங்கும் விஜய் சேதுபதியின் ஆண்டு வருமானம் ரூ.45 கோடி. இது தவிர பல நிறுவனங்களிலும் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். அந்த வகையில் ரூ.51 லட்சம் வருமானம் வருகிறதாம். 

விஜய் சேதுபதிக்கு சென்னையில் கீழ்பாக்கம், எண்ணூர், வடசென்னை என மூன்ற இடங்களில் சொகுசு பங்களாக்கள் உள்ளன. இது தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் விஜய் சேதுபதிக்கு சொத்துக்கள் உள்ளதாம். இவர் தற்போது வசித்து வரும் சென்னை வீட்டின் சந்தை மதிப்பு சுமார் ரூ.50 கோடி என சொல்லப்படுகிறது. 

அது மட்டுமல்ல விஜய் சேதுபதி காஸ்ட்லி  சொகுசு கார் பிரியராம். பல கார்களை வாங்கி தனது வீட்டில் நிறுத்தி வைத்துள்ளாராம். ரூ.1.60 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ 7, ரூ.39 லட்சம் மதிப்பிலான மினி சோப்பர், ரூ.20 கோடி மதிப்புடைய டெயோடா இன்னோவா, ரூ.35 கோடி மதிப்பிலான டெயோடா ஃபார்டியூனர் போன்ற கார்களுக்கு சொந்தக்காரராம் விஜய் சேதுபதி.

தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த படம் செப்டம்பர் 7 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பார் என்பது தான் தற்போது மிகப் பெரிய கேள்வியாக திரையுலகில் போய் கொண்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்