மிக்சர் சாப்பிடலையாம்.. விஜய்யின் அமைதிக்கு இது தான் காரணமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே!

Aug 05, 2025,11:00 AM IST

சென்னை: தவெக தலைவர் விஜய் கூட்டணி தொடர்பாக அமைதியாக இருந்து வருவது சலசலப்பையும், ஒரு விதமான அயர்ச்சியையும் ஏற்படுத்தினாலும் கூட விஜய் தரப்பிடம் பலே திட்டங்கள் இருப்பதாக அக்கட்சியினர் கூறுகிறார்கள்.


அதிமுக ஒரு பக்கம் பிரச்சார சுற்றுப்பயணத்தை துவங்கி விட்டது. அடுத்தபடியாக தேமுதிக, ஓபிஎஸ் என அனைவரும் சுற்றுப் பயணம் துவக்க உள்ளார்கள். மற்றொரு பக்கம் பாமக அன்புமணி நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார்கள். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் கூட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 


திமுக தன் பங்கிற்கு கூட்டணி பேச்சுவார்த்தை, மக்களை கவர நலத்திட்ட பணிகள் என தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. ஆனால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஜய் கடந்த சில நாட்களாகவே மிகவும் அமைதி காட்டி வருகிறார். நிகழ்ச்சிகள், நிர்வாகிகளிடம் பேசும் போது கூட அவேசம் காட்டாமல் அமைதியாகவே பேசி விட்டு, அமைதியாக போவதால், என்னப்பா இவ்வளவு பரபரப்பான சூழலில்...இவர் இப்படி மிக்சர் சாப்பிடுகிறார்? என்று கூட சில கலாய்க்கிறார்கள்.


தவெக திரைமறைவில் நடத்தும் பேச்சுக்கள்




பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அறிவித்ததும் அவர் திமுக அல்லது தவெக பக்கம் செல்வார் என மீடியாக்கள் பேச துவங்கியதுமே விஜய் ஓடி போய் அவரை தனது பக்கம் இழுத்திருக்க வேண்டாமா? அரசியல் தெரியாதவராக இருக்கிறாரே என்று கூட சிலர் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். ஆனால் திரைமறைவில் நடக்கும் பல விஷயங்கள் தான் விஜய்யின் இந்த அமைதிக்கு காரணம் என தெரிந்தால் நீங்களே ஆடி போய் விடுவீர்கள்...அட இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே என நீங்களே சொல்லுவீர்கள். அப்படி என்ன நடக்கிறது என்கிறீர்களா? சொல்கிறோம்.


திமுக, பாஜக.,வுடன் கூட்டணி கிடையாது என்று தான் விஜய் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். ஆனால் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என விஜய் எங்குமே சொல்லவில்லை. காங்கிரஸ் தான் ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கிறதே...சொல்லப் போனால் தமிழகத்தில் திமுக.,வாகவே காங்கிரஸ் மாறி விட்ட நிலையில் தானே இருக்கிறது. அவர்கள் எப்படி எப்படி விஜய் உடன் கூட்டணி வைப்பார்கள் என நீங்கள் கேட்கலாம். ஆனால் அது உண்மை இல்லை. தேர்தல், அரசியல் என வரும் போது அனைத்தும் கட்சிகளுமே இருக்கும் அனைத்தும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தத் தான் நினைப்பார்கள். இது தான் அரசியல் யதார்த்தம். இதை தான் தற்போது காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.


தமிழக காங்கிரஸ் வேண்டுமானால் 2026 தமிழக சட்டசபை தேர்தலை கவனிக்கலாம். ஆனால் காங்கிரஸ் மேலிடம் 2029 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து தான் தற்போது விஜய்யுடன் கூட்டணி என்ற முயற்சியில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் முதலில் கூட்டணி வைக்க நினைத்தது அதிமுக உடன் தானாம். கூட்டணிக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் துவங்கி நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் தான் எடப்பாடி பழனிச்சாமி அவசரமாக டில்லி சென்று பாஜக உடன் கூட்டணியை பேசி முடித்து விட்டு வந்து விட்டாராம். 


மல்லிகார்ஜூன கார்கே பேசினாரா?




இதனால் தான் அடுத்த வாய்ப்பான விஜய்யுடன், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட சிலர் விஜய்யுடன் தொலைப்பேசியில் பேசி உள்ளார்களாம். தமிழக சட்டசபையில் 63 ஆக இருந்த காங்கிரசின் பலம் தற்போது 10 ஆக சுருங்கி விட்டது. ஆனால் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் மீண்டும் அந்த 63 ஐ பிடிக்க வாய்ப்புள்ளது. காரணம் கூடுதல் சீட்களை விஜய் தருவார். அது மட்டுமல்ல பக்கத்து மாநிலமான கேரளாவிற்கும் விஜய் ஒருமுறை சுற்றுப் பயணம் போய் வந்தாலே போதும் மீண்டும் அங்கும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விடும். அந்த அளவிற்கு கேரளாவிலும் விஜய்க்கு செல்வாக்கு அதிகம். 


கேரளாவில் ஆட்சியை பிடித்தால் கூடுதல் ராஜ்யசபா சீட்களை பெற்று, ராஜ்யசபாவில் பலத்தை உயர்த்தலாம். அதே போல் தென் மாநிலங்களில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அதை வைத்து ஓட்டுக்களை அள்ள முடியும். வட மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு அலை அதிகரிக்க துவங்கி உள்ளதால் அதையும் ஓட்டுக்களாக மாற்றும் வேலையை செய்தால் 2029 லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் வெற்றி எளிதாகி விடும். இத்தனை அரசியல் கணக்குகளையும் கூட்டி கழித்து தான் காங்கிரஸ், விஜய்யுடன் கை கோர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.


ஆனால் இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையாகப் போகிறது என்று தெரியவில்லை. காரணம் அனல் பறக்கும் அரசியல் களத்தில் விஜய்யின் அமைதி அரசியல் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை. அதேசமயம், மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க படு தீவிரமாக இருக்கிறது திமுக. எனவே அவ்வளவு சாதாரணமாக கூட்டணி முறிய அது அனுமதிக்காது. மேலும் பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் மீண்டும் திமுக ஆட்சியே வர வாய்ப்புகள் அதிகம் என்று தெரிய வந்துள்ளது. எனவே எப்பாடு பட்டாவது கூட்டணியைக் காப்பாற்றி ஆட்சியை தக்க வைக்கவே திமுக முயலும். எனவே இப்போது வெளியாகும் எந்தத் தகவலும் கூட்டணிகள் உருவான பிறகே சரியா, தவறா என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உத்தராகண்ட் வரலாறு காணாத காட்டாற்று வெள்ளத்தால் மலைச்சரிவு... 17 பேர் உயிரிழப்பு!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக., 14ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

news

7 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

எங்கள் வேலை வாய்ப்புகளை இந்தியர்கள் பறிக்கிறார்கள்.. அமெரிக்க குடியரசுக் கட்சி பிரமுகர் புலம்பல்

news

சேலத்து மகாராணி.. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா.. களை கட்டிக் காணப்படும் சேலம்!

news

தமிழ்நாடு தந்த அன்பை.. சிறப்பாக திருப்பிக் கொடுத்துள்ளீர்கள்.. சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு

news

மிக்சர் சாப்பிடலையாம்.. விஜய்யின் அமைதிக்கு இது தான் காரணமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 05, 2025... இன்று உதவிகள் தேடி வரப்போகும் ராசிகள்

news

தவெக 2வது மாநில மாநாடு.. இன்று புதிய தேதியை அறிவிக்கிறார் விஜய்.. அனுமதி கிடைக்குமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்