பரந்தூரில் விஜய்.. ஓபன் வேனில் கல்யாண மண்டபத்துக்கு வந்தார்.. தவெகவினர் பிரமாண்ட வரவேற்பு

Jan 20, 2025,12:41 PM IST

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடிவரும் கிராம மக்களை சந்திக்க இன்று முற்பகலில் பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய். அவருக்கு வழியெங்கும் ஆயிரக்கணக்கான தவெகவினர் திரண்டு நின்றும், அவரது வேனுடன் சேர்ந்து பயணித்தும் வரவேற்பு அளித்தனர்.


சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை விட, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் மிக பிரம்மாண்டமாக இரண்டாவது பசுமை வெளி விமான நிலையம் அமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ. 2000 கோடி செலவில் 5000 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்யும் பணியில் தொடர்ந்து அரசு ஈடுபட்டு வந்தது. 




அப்போது பரந்தூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களான ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு உள்ளிட்ட 20 கிராமங்கள் மற்றும் விளை நிலங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் கிராம மக்கள் இப்பகுதியில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து  கடந்த இரண்டரை வருடங்களாக நடத்தி வருகின்றனர். இன்று போராட்டம் 910வது நாளை எட்டியுள்ளது.


இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பரந்தூர் பகுதி கிராம மக்களுக்கு ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராடும் மக்களை சந்திக்க முடிவு செய்தார் விஜய். அம்பேத்கர் திடலில் பரந்தூர் மக்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார் விஜய்,. ஆனால் காவல்துறை பாதுகாப்பு கருதி  அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தற்போது அருகில் உள்ள  வீனஸ் கல்யாண மண்டபத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.  அங்கு வைத்து மக்களை சந்திக்கிறார் விஜய்.


இதற்காக பரந்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேன்கள் மூலம் கல்யாண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவார்கள். பிற மாவட்டங்களிலிருந்து வரும் யாருக்கும் அனுமதி கிடையாது. பொதுச் சொத்துக்களுக்கு தவெகவினரால் சேதம் ஏதும் ஏற்படக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 


காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கிணங்க, விவசாயிகள் மட்டுமே மண்டபத்திற்குள் இருக்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளார். விஜய் வருகையின் வருகையை முன்னிட்டு 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மக்களின் பிரச்சினைகளுக்காக மட்டுமே குரல் கொடுத்து வந்த நடிகர் விஜய் தற்போது முதல் முதலாக பரந்தூர் மக்களை  இன்று நேரில் சந்திக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.


தனது வீட்டிலிருந்து புறப்பட்ட விஜய்க்கு, வழியெங்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். மேலும் நூற்றுக் கணக்கானோர் விஜய்யுடன் சேர்ந்து தங்களது வாகனங்களில் பயணித்தபடி வந்தனர். பரந்தூர் வந்தடைந்த விஜய், மேல் பொடவூர் கல்யா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தபோது அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இதையடுத்து வேனுக்கு வெளியே நின்றபடி விஜய் மக்களை பார்த்து கையசைத்தபடி வந்தார் விஜய். பிறகு வேனில் இருந்தபடியே விஜய் மைக்கில் பேசினார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்